பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

விட்டுவிடு” என்று கூறினாள். அது கேட்டு அரசன் அவள் மேல் சீற்றங் கொண்டான். (இவ்வாறு பெரும்பற்றப்புலியூர் நம்பி தம்முடைய திருவாலவாயுடையார் திருவிடையாடற் புராணத்தில் கூறுகிறார். இசைவாது வென்ற திருவிளையாடல் 1-5)

ஸ்ரீ வல்லவனுக்குப் பல மனைவியர் இருந்தார்கள். அவர் களில் ஒருத்தி அரசனுடைய அன்பையும் ஆதரவையும் அதிகமாகப் பெற்றிருந்தாள். அந்த அரசிக்கும் கலைக் செல்வியாகிய பாடினிக்கும் இசைக் கலை காரணமாக இகல் ஏற்பட்டது. இறுமாப்பை அடக்க எண்ணி, பாடினியை அவமானப்படுத்தி இறுமாப்பை அடக்க வேண்டுமென்று அரசனிடங் கூறினாள். அரசன் அதற்கு இசைந்து பாடினியை அவமானப்படுத்த எண்ணினான். (இவ்வாறு பரஞ்சோதி முனிவர் தம்முடைய திருவிளையாடற் புராணத்தில் கூறுகிறார். இசைவாது வென்ற படலம் 2-4)

எந்தக் காரணமாக இருந்தாலும் சரி. பாண்டியன் பாடினியை அவமானப்படுத்த எண்ணினான். வெளிநாட்டிலிருந்து இசைக் கலையில் வல்லவளான ஒரு விறலியை அழைத்து வந்து அவளைக் கொண்டு பாடினியை அவமானப்படுத்தக் கருதினான். கருதி, தான் வென்ற இலங்கைத் தீவிலிருந்து பாணர் குலத்தில் பிறந்த இசைக்கலை பயின்ற ஒரு விறலியை ஒருவரும் அறியாதபடி மறைவாக வரவழைத்தான் அவளுக்குப் பொருளைப் பரிசாகக் கொடுத்து “பாணபத்திரனுடைய மனைவியான பாடினி இசைக்கலையில் வல்லவள் என்று இறுமாப்புக் கொண்டிருக்கிறாள். அவளை நீ இசைவாதில் தோற்பிக்க வேண்டும். அவள் அந்தப்புரத்துக்கு இராணிகளிடம் இசை வாசிக்க வருவாள். அவளை நீ வாதுக்கு அழைத்து உன்னுடன் இசைபாடச் செய். அதற்கு அவள் இணங்காவிட்டால் அவளை இகழ்ந்து பேசு. அப்போது அவள் ஆத்திரமடைந்து உன்னுடன் இசைவாது செய்ய ஒப்புக்கொள்வாள். இருவரும் சபையில் பாடுங்கள். நான் உன் சார்பாக இருப்பேன். நீதான் போட்டியில் வென்றாய் என்று கூறுவேன். நீ அஞ்சாதே!” என்று அவளிடம் இரகசியமாகக் கூறினான். இலங்கையிலிருந்து வந்த விறலி, அதற்கு இணங்கினாள். “மன்னர் பெருமானே! நீர் இருக்கும் போது என்னை வெல்பவர் யார்?” கூறி அரசன் கருத்துக்கு இசைந்தாள்.

நீ

அரசன் "இந்த விஷயம் இரகசியமாக இருக்கவேண்டும். ஒருவருக்கும் தெரியக்கூடாது. நீயே அவளை வாதுக்கு அழைப்பது