பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

'நாளைக்கு நீங்கள் இருவரும் சபைக்கு வந்து பாடுங்கள்” என்று கூறினான் அரசன்.

பிறகு, “வென்றவருக்குப் பரிசு என்ன? தோற்றவர் வென்ற வரைத் தோளின்மேல் ஏற்றிச் சபை நடுவில் சுமக்க வேண்டும். இதுதான் வெற்றியின் பரிசாக இருக்க வேண்டும்” என்று அரசன் கூறினான். இதற்கு கலைவாணிகள் இருவரும் சம்மதித்தார்கள்.

மறு நாள் அரச சபையில் இசை வாது நிகழ்ந்தது. அமைச்சரும், அரசனின் பரிவாரங்களும் கூடியிருந்தனர். கலை வாணிகள் இருவரும் அரச சபைக்கு வந்து இசை பாடினார்கள்.

முதலில் பாடினி யாழ் வாசித்து இசை பாடினாள். அரச சபையில் இருந்தவர் அவளுடைய இசைப் பாட்டைப் பாராட்டி வியந்து கைகொட்டி மகிழ்ந்தார்கள்.

பிறகு விறலி பாடினாள். அதை ஒருவரும் பாராட்ட வில்லை. ஆனால், அரசன் மாறாக விறலியை மெச்சினான். அவளைப் பாராட்டிப் புகழ்ந்தான். அரசன் கூறியதைக் கேட்டுச் சபையிலிருந்தவர் திகைத்தார்கள். உண்மைக்கு மாறாக விறலியை அரசன் பாராட்டி யதைக் கண்டு அதிசயப்பட்டார்கள். பிறகு, அரசனுடைய விருப்பம் இது என்று அறிந்து தங்களுடைய முன்னைய முடிவை மாற்றிக் கொண்டு விறலியின் இசையே சிறந்தது, விறலியே இசை வல்லவள் என்று கூறினார்கள். 'இராஜன் மெச்சினவள் இரம்பை என்பது பழமொழியல்லவா?

தென்னனவன் உட்கோள் எல்லை தெரிந்தனர் அவையத் துள்ளார் அன்னவன் புகழ்ந்த வாறே புகழ்ந்தனர் அவளைத் தானே முன்னவன் அருளைப் பெற்று மும்மையுந் துறந்தா ரேனும் மன்னவன் சொன்னவாறே சொல்வது வழக்கா றன்றோ?

பாண்டியன் தனக்குள் சிந்தித்தான். சபையோர் பாடினியின் பாட்டை மெச்சினார்கள். விறலியின் பாட்டை மெச்சவில்லை. நாம் விறலியின் இசையைப் புகழ்ந்ததைக் கண்டு இவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு விறலியைப் புகழ்ந்தார்கள். இந்த நிலையில் நாம் விறலியின் சார்பாக முடிவு கூறுவது சரியன்று. நாளைக்கும் இசைப்போட்டியை நடத்தினால் சபையோரும் என்னுடன் சேர்ந்து விறலியைப் புகழ்வார்கள். அப்போது விறலியின் சார்பாக முடிவு