பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

என்று கடவுளிடத்தில் முறையிட்டுக் கொண்டாள்.

மறுநாள் சொக்கநாதர் ஆலயத்தின் மண்டபத்திலே சபை கூடிற்று. அரசனும் அவனைச் சார்ந்த அரச சபையோரும் சபைக்கு வந்தார்கள். நகரத்துப் பெரு மக்களும் சபையில் வந்திருந்தார்கள். இசைப் போட்டிக்காரராகிய பாடினியும், விறலியும் வந்திருந்தனர். அரசன் இசைப் போட்டியைத் தொடங்கும்படி கட்டளையிட்டான். இசை யரங்கு தொடங்கிற்று. முதலில் விறலி பாடினாள். சபையோர் அவள் பாடலை ஓர்ந்து கேட்டார்கள். அவளுடைய இசை செம்மையாக இல்லை. அவளுடைய இசையை ஒருவரும் வியக்கவில்லை.

புனைபெருக் குரல் கடத்தல் புரைத்தன் மேல் ஒருக்கல் மிக்க வினைபடு காக லோசை காகுளி விலங்கல் நீங்காத்

தனிபடு கட்டை எட்டின் தகுதியில் திகழும் பொல்லா

இனிமைஇல் சுரத்தைக் கண்டாங் கிருந்தவர் வியந்தா ரில்லை விறலி பாடி முடிந்த பிறகு பாடினி இசை பாடினாள். இவளுடைய இசை சிறந்து இனிமையாக இருந்தது. கேட்டவர் வியந்து அதிசயித்தார்கள். ஆக்கரி முரற்சி யென்ன அருங்குயில் ஓசை என்ன

வாங்கிருங் கடலுள்வாழும் வலம்புரி முழக்கம் என்ன

ஓங்கிய சராசரங்கள் உருகிடப் பாடும் நீதி

தூங்குமூ விசையைக் கண்டு துதித்தனர் இருந்தோர் யாரும்

தணிலின் மாத்திரை ஒன்பானும் தானங்கள் எட்டினானும் நணுகிய கிரியை பத்து நன்பதின் மூன்றெழுத்தால்

அணுகிய தொழிலால் ஓங்கு மைந்தினால் விளங்கு மும்மைத் திணையெழு பாடல்கண்டு தேவரும் அதிசயித்தார்

விறலி பாடின இசைப்பாட்டுச் சிறக்காமலும் பாடினி பாடின இசைப்பாட்டுச் சிறந்தும் இருந்ததை எல்லோரும் அறிந்தார்கள். பாண்டிய மன்னனும் இதனை நன்குணர்ந்தான். உண்மைக்கு மாறாக விறலி வென்றாள் என்று தன்னுடைய அரச சபையில் நேற்றுக் கூறியதுபோல இந்தச் சபையில் கூறினால் மக்கள் தன்னைப் பழித்து நிந்திப்பார்கள் என்பதை அறிந்தான். அவன் என்ன செய்ய எண்ணினானோ அதைச் செய்ய அவனால் முடியவில்லை. நகர மக்கள் உள்ள இடத்தில் நடுநிலை தவறிப் பேச இயலவில்லை.