பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

225

பெருமான் அடியார்களின் கனவில் தோன்றி “நீலகண்டன் தரையில் நின்று யாழ் வாசிப்பதனால் சீதந்தாக்கி யாழின் வீக்கு அழியும். அதனால் யாழின் இசை குறையும். பலகை இட்டு அதன்மேல் இருந்து பண் இசைக்கட்டும்,” என்று கூறி மறைந்தார். அடுத்த நாள் பொழுது விடிந்தபோது அடியார்கள் தாங்கள் கண்ட கனவை யுணர்ந்து திருநீலகண்டரைக் கோயிலுக்குள் அழைத்துக் கொண்டுபோய்ப் பலகையிட்டு அதன் மேல் இருந்து இசை பாடச் சொன்னார்கள். அவர் அவ்வாறே பலகையில் அமர்ந்து இசை பாடினார். சிவபெருமானுடைய சிறப்புக்களை யாழில் இசைத்துப் பாடினார்.

திரிபுரம் எரித்தவாறும் நேர்மிசை நின்றவாறும்

கரியினை யுரித்தவாறும் காமனைக் காய்ந்த வாறும் அரியயற் கரிய வாறும் அடியவர்க் கெளியவாறும் பிரிவினால் பாடக்கேட்டுப் பரமனார் அருளினாலே அந்தரத் தெழுந்த ஓசை அன்பினிற் பாணர் பாடும் சந்த யாழ் தரையிற் சீதத் தாக்கில் வீக் கழியும் என்று சுந்தரப் பலகை முன் நீர் இடும் எனத் தொண்டர் இட்டார் செந்தமிழ்ப் பாணனாரும் திருவருள் பெற்றுச் சேர்ந்தார்

(திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணம் 5, 6)

சில நாட்கள் அங்குப் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண் டிருந்த பிறகு சோழ நாட்டுக்குத் திரும்பி வந்து திருவாரூரில் தங்கி அந்தக் கோயிலில் யாழ் இசைத்துப் பண்பாடிக் கொண்டிருந்தார். நீலகண்டனாருடைய இசையின் புகழும் பக்தியின் மேன்மையும் எங்கும் பரவின.

அந்தக் காலத்தில் சீகாழியில் ஞானசம்பந்தர் என்னும் சிவபக்தர் தோன்றிக் கோயில்கள் தோறும் சென்று பக்திப் பாடல்களாகிய திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். அந்தச் செய்தியை நீல கண்டர் கேள்விப்பட்டார். ஞானசம்பந்தர் பாடும் இசைப் பாடல்களைத் தம்முடைய யாழில் பண் அமைத்து வாசிக்க வேண்டுமென்று கருதித் தம்முடைய மனைவியார் மாதங்கியாருடன் சீகாழிக்கு வந்தார். வந்து ஞானசம்பந்தத்தைக் கண்டு அவருக்குத் தம்முடைய கருத்தைத் தெரிவித்தார். ஞான சம்பந்தரும் இவருடைய இசையைப் பற்றி முன்னமே கேள்விப் பட்டிருந்தபடியால் இவரை வரவேற்றார். தோணியப்பர் திருக்கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போய் யாழ்

·