பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இசைத்து இசை பாடுமாறு கூறினார். நீலகண்டர் யாழ் வாசிக்க மதங்கசூளாமணியார் பாட்டுப் பாடினார். அவ்விசைப் பாடலைக் கேட்டு எல்லோரும் மகிழ்ந்து புகழ்ந்தார்கள்.

தானா நிலைக் கோல்வடித்துத் படிமுறைமைத் தகுதியினால் ஆன இசை ஆராய்வுற்று அங்கணர்தம் பாணியினை மானமுறைப் பாடினியார் உடன்பாடி வாசிக்க

ஞானபோ னகர் மகிழ்ந்தார் நான்மறையோர் அதிசயித்தார்

யாழில் எழும் ஓசையுடன் இருவர்மிடற் றிசை ஒன்றி வாழிதிருத் தோணியுளார் மருங்கணையும் மாட்சியினைத் தாழும்இரு சிறைப்பறவை படிந்துதனி விசும்பிடை நின்று ஏழிசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்திசைத்தார் (திருஞானசம்பந்த நாயனார் புராணம் 135, 136)

அன்று முதல் திருஞான சம்பந்தரும் திருநீலகண்ட யாழ்ப் பாணரும் தமிழ்நாட்டுத் தலங்கள் தோறும் சென்று திருக்கோயில்களில் கடவுளை வணங்கி இசை பாடினார்கள். ஞான சம்பந்தர் பதிகங்களைப் பாட அந்தப் பாடல்களை யாழ்ப்பாணர் தம்முடைய யாழில் பண் அமைத்து வாசித்தார். இவ்விசைச் செல்வர்களின் இசையைக் கேட்டு மக்கள் மகிழ்ந்தார்கள். இவர்களுடைய புகழ் நாடெங்கும் பரவி இவர்களுடைய இசையைக் கேட்பதற்கு ஊர்கள் தோறும் மக்கள் திரள் திரளாகக் கூடினார்கள். திருஞான சம்பந்தரும் திருநீல கண்டரும் திருக் கோயில்கள் உள்ள ஊர்கள் தோறும் சென்று பண் பாடியும் யாழ் வாசித்தும் இசையமுதம் வழங்கினார்கள். பல ஊர்களுக்குச் சென்று பிறகு தருமபுரம் என்னும் ஊருக்கு வந்தார்கள். தருமபுரம் நீலகண்டரின் தாயார் பிறந்த ஊர். அவ்வூர் மக்கள் திரளாக வந்து இவர்களை வர வேற்றார்கள். அவ்வூர்ப் பாணர் குலத்து மக்களும் வந்து இவர்களை வர வேற்றார்கள். அவர்கள் நீலகண்டருடன் அளவளாவி மகிழ்ந்தார்கள்.

அப்போது, திருநீலகண்டர் அவர்களிடத்தில், "சம்பந்தப் பிள்ளையார் பாடும் திருப்பதிகப் பாட்டுகளை அடியேன் யாழில் இட்டுப் பண் இசைக்கும் பேறுபெற்றேன்" என்று கூறி மகிழ்ந்தார்.

இதைக்கேட்ட பாணர்கள், "பதிகங்களை யாழில் இசை யமைத்துப் பாடுக. அதனால் உலகத்தில் இசைக் கலை வளரட்டும் என்று கூறினார்கள். நீலகண்டர், “யாழில் பண் அமைத்து இசை வாசிக்க முடியாத பாடல்களும் உள்ளன" என்று கூறி, அவ்வாறு பண் அமைத்து