பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

231

திருந்தன. மதுரை ஆலவாய்த் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சொக்கப் பெருமான் மீது அவன் இசைப்பாட்டுப் பாடினான். அப்போது அவன் பாடின இசை சாதாரிப் பண்.

விரைசார் மலரோன் அறியா விசிர்தன்

அரைசாய் மதுரை அமர்ந்தான் என்னே! அரைசாய் மதுரை அமர்ந்தான் அவனென் புரைசார் மனனும் புகுந்தான் என்னே!

பாடல் மறையும் தெளியாப் பரமன் கூடல் கோயில் கொண்டான் என்னே! கூடல் போலக் கொடியேன் அகமும் ஆடல் அரங்கா அமர்ந்தான் என்னே!

நீல வண்ணன் தேரு நிமலன் ஆல வாயில் அமர்ந்தான் என்னே! ஆல வாயான் அலரில் வாசம்

போலேன் உளமும் புகுந்தான் என்னே!

அவன் பாடின சாதாரிப்பண் அண்டை அயலில் இருந்தவர் காதுகளில் புகுந்து மனத்தைக் கவர்ந்தது. அவர்கள் வியப்புடன் அங்கு வந்து அவனைச் சூழ்ந்து நின்றனர். விறகு வெட்டியின் அமிழ்தம் போன்ற இசைப்பாட்டு தேவகானமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் தம்மை மறந்து இசையில் மனம் ஒன்றி அசை வற்று நின்றார்கள். வீட்டுக்குள் இருந்த இசைப் புலவன் ஏமநாதனும் இவ்வினிய இசை கேட்டு அதிசயப்பட்டு வெளியே வந்தான். எளியவனான விறகு வெட்டி யொருவன் அழுக்கடைந்த மேனியுடன் புழுதி படிந்த ஆடையுடன், திண்ணைமேல் அமர்ந்து தேவகானம் பாடு பதைக் கண்டு ஆச்சரியப் பட்டு அசைவற்று நின்று சாதாரிப் பண்ணைச் செவிமடுத்துக் கேட்டான். இசை பாடி முடிந்தவுடன் ஏமநாதன் அவன் அருகில் சென்று, “நீ யார்? எங்கிருப்பவன் நீ? இது என்ன விறகுக் கட்டு” என்று வினவினான்.

“ஐயா! நான் ஏழை. விறகு விற்றுப் பிழைக்கிறேன். முன்பு எங்கள் இசையாசிரியர் பாணபத்திரரிடத்தில் மாணவனாக இருந்து இசை பயின்றேன். என்னை, இசை பாடத் தகுதியற்றவன் என்றும், உதவாக்கறை, கடை மாணாக்கன் என்றும் கூறி என்னை விலக்கி விட்டார். வயிற்றுப் பிழைப்புக்கு விறகு விற்கிறேன்.”