பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

எம் பெருமான் சொக்கப் பெருமானுடைய இசைப் புலவராவீர்” என்று கூறினான். பத்திரனுக்குப் பெரும் பொருளைப் பரிசாக வழங்கி அனுப்பினான்.

அரண்மனையில் இசைப்புலவனாக இருந்த பாணபத்திரன் அன்று முதல் சொக்கநாதர் கோவிலில் சொக்கப் பெருமானுடைய இசைப் புலவனாக அமர்ந்தான். அரசனே அவனைக் கோயில் இசைப் புலவனாகச் செய்துவிட்டாரல்லவா? திருக்கோயில் சபையார் பத்திரனைத் தங்கள் கோவில் இசைவாணராக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். பாணபத்திரன் நாள் தோறும் காலையிலும் மாலையிலும் திருக்கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தான்.

சை

அயன் தலை யறுத்தல் பாடி யரக்கனை யடர்த்தல்பாடிக் கயந்தனை உரித்தல் பாடிக் காலனை யுதைத்தல் பாடி வியன்புரம் எரித்தல் பாடி வேள்கெட விழித்தல் பாடி

சயந்தரும் புகழ்கள் மற்றும் பாடினான் சால வாழ்த்தி

பாடிக்

கோவிலுக்கு வந்து கடவுளை வணங்கிய பிறகு மக்கள் பாண பத்திரனுடைய இசைப் பாட்டை நாள்தோறும் கேட்டு மகிழ்ந்தார்கள்.

இவ்வாறு இருக்கும் காலத்தில் ஒருநாள் இரவு திடீரெனப் பெருமழை பெய்தது. எங்கும் வெள்ளமும் சேருமாயிற்று. இடி மின்னல் மழைகளையும் பாராமல் பாணபத்திரன் வழக்கம் போலச் சொக்கர் ஆலயஞ் சென்றான். சில்லென்று குளிர்ந்த காற்று வீசிற்று. அவனுக்குக் குளிரினால் உடல் நடுங்கிற்று. யாழின் நரம்புகள் நனைந்துவிட்டன. ஈரத் தரையில் நின்று கால்கள் சிலிர்த்துவிட்டன. இவ்வளவு துன்பத்திலும் அவன் சொக்கப்பெருமான் மேல் பக்தியோடு இசைபாடினான்.

மைக்குலம் ஏற்றுங்கல்லால் அம்பினால் மாமருந்தால் தக்கமெய் சால நோவோன் தந்திரி யாழ் நனைந்து மிக்க கூர் உசிர்நனைந்து விரல் நடுக்குறவும் போகான் சிக்கன உடனே நின்று பாடினான் சிவனையுன்னி

நரம்பு நனைந்து இசைமழுங்க நனைந்து உடலம் பனிப்பஇசை வரம்பொழுகு விரல் மிறைத்து வலிவாங்க மயிர் சிலிர்ப்ப நிரம்பிய சேறு அடிபுதைப்ப நின்றுநிறை யன்பிசையாய் அரும்புதல் போல் என்புருக்கும் அமுத இசை பாடுமால்!