பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

237

அப்போது கோயிலில் இருந்த எல்லோர் காதிலும் ஒரு குரல் தெளிவாகக் கேட்டது, ‘பத்திரன் சேற்றில் நின்று கொண்டு பாடுகிறான். அவனுக்குப் பலகை இடுங்கள், பத்திரன் பலகை மேல் இருந்து பாடட்டும்.' இவ்வாறு அந்தக் குரல் கூறியது. இந்த ஆகாயவாணி 'தெய்வக் கட்டளை' போலத் தோன்றிற்று. இது கடவுளுடைய தெய்வ வாக்கு என்று எல்லோரும் கருதினார்கள். ஒருவர் மனைப் பலகை ஒன்றைக் கொண்டு வந்து பாணபத்திரன் அருகில் தரைமேல் இட்டார். அதன் மேல் இருந்து பாண பத்திரன் யாழ் வாசித்து இசை பாடினான்.

காண்டகு குரலொடு துத்தங் கைக்கிளை

வேண்டிய உழை இளி விளரி தாரம் என்று ஈண்டிய நெறியின் ஏழிசையும் இன்புறப் பூண்ட தந்திரிகளில் புரிந்து பாடினான்

நெடுநேரம் பத்திரன் பக்தியோடு சொக்கப் பெருமான் மேல் பாடினான். பெய்த பெருமழை நின்றுவிட்டது. ஆகாயத்தில் மேகங்கள் மறைந்துவிட்டன. தூயவானத்திலே விண்மீன்கள் வெளிப்பட்டு மின்னின. காலமல்லாக் காலத்தில் திடீரென்று பெரு மழை பெய்து பிறகு அறவே நின்றுவிட்டது எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. அன்று முதல் பாணபத்திரன் அந்தப் பலகைமேல் இருந்து இசை பாடிக் கொண்டிருந்தான்.

பாண்டியன் பரிசாகக் கொடுத்த பெரும் பொருளைப் பாணபத்திரன் தன்னுடைய உற்றார் உறவினர்களுக்குக் கொடுத்தப்படியால் அவன் நாளடைவில் வறியவனானான். ஏழ்மையினால் வருந்தினான். அவனுடைய வறுமை நாளுக்கு நாள் அதிகமாயிற்று. ஆனாலும் அவன் நாள்தோறும் வந்து திருக்கோயிலில் இசை பாடிக் கொண்டிருந்தான்.

கடவுளை இசைப் பிரியர் என்பர். பத்திரன் நாள்தோறும் அவருக்காகவே பாடிக் கொண்டிருக்கும் இசையை அவர் கேட்டு மகிழ்ந்திருப்பார். அன்றியும் அவன் பக்தியோடு பாடுகிறான். அந்த இசை அவருக்குப் பேரின்பமாகத்தான் இருந்திருக்கும். அவர், தன்னுடைய இசைப்பாணன் வறுமையினால் வருந்து வதையறிந்து அவனுடைய வறுமையை நீக்க எண்ணினார்.

பாணபத்திரன் உறங்கிக் கொண்டிருந்தபோது சொக்கப் பெருமான் அவனுடைய கனவில் தோன்றினார். "உனக்கு நாளைக்கு ஒரு திருமுகக்கடிதம் அளிப்போம். அந்தக் கடிதத்தைக் கொண்டு