பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

போய் சேர நாட்டை ஆளுகிற சேரமான் பெருமானிடம் கொடு. அவன் உனக்குப் பொருள் கொடுப்பான். பெற்றுக்கொள்” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கனவு கண்ட இசைப் புலவன் இக்கனவைப் பற்றி அதிசயமடைந்தான்.

அந்தக் காலத்தில் சேரநாட்டை யரசாண்டவன் சேரமான் பெருமான் என்னும் அரசன். அவனுக்குக் கழறிற்றறிவார் என்றும் பெயர் உண்டு. அவன் சிறந்த சிவபக்தன். சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சைவ சமய குரவரும் அக்காலத்தில் இருந்தவரே. சேரமான் பெருமாளும் சுந்தர மூர்த்தி நாயனாரும் நண்பர்களாக இருந்தார்கள் சிவபெருமான் சேரமான் பெருமாளின் கனவிலும் தோன்றினார். "பாண்டிய நாட்டிலிருந்து பாணபத்திரன் என்னும் அன்பன் உன்னிடம் வருவான். அவன் வறுமை நீங்கும் அளவு பொருள் கொடுத்து விடுக என்று கூறி அருளினார்.

அடுத்த நாள் காலையில் பாணபத்திரன் வழக்கம் போல சொக்கநாதர் ஆலயஞ்சென்று யாழ் வாசித்து சிவபெரு மானுடைய புகழைப் பாடிக் கொண்டிருந்தான். பக்தர்கள் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இசைப் பாட்டு முடிந்த பிறகு திருவுண்ணாழி கையில் (கர்ப்பக்கிருகம்) அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் கையில் ஓலை ஏட்டுடன் வந்து பாணபத்திரனிடத்தில் கொடுத்தார்.

“சொக்கப் பெருமானுடைய திருவடியண்டை இந்த ஓலை இருந்தது. இது உமக்குரியது” என்று அவர் கூறினார். பாணபத்திரன் அதிசயத்தோடு அதை அன்போடு இரு கைகளாலும் பெற்றுக் கொண்டான். தான் முன் நாள் இரவு கண்ட கனவு நனவானதை யறிந்து வியப்படைந்தான். அந்தத் திருமுக ஓலையில் ஒரு செய்யுள் எழுதப் பட்டிருந்தது. அதை அவன் வாசித்துப் பார்த்தான். அச்செய்யுள் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

மதிமலி புரிசை மாடக்கூடல்

பதிமிசை நிலவும் பால்நிற வரிச் சிறை அன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவனியான் மொழி தரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்