பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

அதே சமயத்தில் சிஞ்சா மாணவிகையின் வயிறு சுருங்கிக் காணப்பட்டது. அவள் உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப் பனியைப் போலத் திகைத்தாள்.

அம்மையார் கூறினார்: “இவள் மரக்கட்டையை வயிற்றில் கட்டிக்கொண்டு, சூல்கொண்டவள்போல நடித்து பகவர்மேல் வீணாகப் பழிசுமத்துகிறாள். இப்போது இவள் வயிற்றைப் பாருங்கள். வயிற்றில் கர்ப்பம் இல்லையே. இல்லையே. அது எங்கே போயிற்று? இவளைப் பார்க்கும்போதே தெரியவில்லையா இவளுக்குச் சூல் இல்லை என்று? கொண்டவர்களுக்கு முகத்திலும் மற்ற உறுப்புகளிலும் மாறுதல்கள் ஏற்படுவது வழக்கம். அப்படிப் பட்ட மாறுதல்கள் இவள் உடம்பில் இல்லையே! இவள் நீலி! பழிகாரி” என்று கூறினார்.

சூல்

கூட்டத்தில் ஆத்திரம் உண்டாயிற்று.

66

“மோசக்காரி,” சண்டாளி”, “பழிகாரி”, “துரத்துங்கள் அவளை”, “விரட்டியடியுங்கள்,” “மகாபாபி.

மக்கள் இப்போது உண்மையைத் தெரிந்துகொண்டார்கள். அமைதி கலைந்து கூச்சலும் சந்தடியும் ஏற்பட்டது. சிஞ்சா மாணவிகை கூட்டத்தைவிட்டு ஓடினாள். மக்கள் அவளை விரட்டித் துரத்தினார்கள். தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று அவள் விரைவாக ஓடிவிட்டாள்.

சிஞ்சா மாணவிகை, வேறு மதத்தைச் சேர்ந்த சந்நியாசினி, பௌத்த மதம் சிறப்படைந்து செல்வாக்கடைந்திருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட வேறு மதத்துச் சந்நியாசிகள் பகவன் புத்தர்மீது அபவாதம் உண்டாக்கி, அவருடைய மதத்தை அழிக்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் சிஞ்சா மாணவிகையை ஏவி இவ்வாறு அவதூறு சொல்லச் செய்தார்கள். ஆனால் அவளே அவமானப்பட்டு ஓடினாள்.