பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் /77 கொண்டிருந்தான். சேவகர் அவனைக் காணும்போது, அவர்கள் முகத்தில் விழிக்காமல் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான். காவல் சேவகருக்கு அரசகுமாரன் மீது மேன்மேலும் ஐயம் அதிகப்பட்டது. அவர்கள் மற்றும் ஒரு முறை அரசகுமாரன் நடவடிக்கையைப்பற்றிஅரசரிடம் கூறினார்கள்.

அரசர் அஜாதசத்துருவை அழைத்து, "குமார! கட்டாரியும் கையுமாக அரண்மனையிலே இரவும் பகலும் நடமாடுவதாகக் காவல் சேவகர் கூறுகிறார்கள். நீ யாரையோ கொலை செய்ய எண்ணங் கொண்டிருப்பதாக அவர்கள் ஐயப்படுகிறார்கள். அவர்கள் கூறுவது பொய் அல்லவா?" என்று கேட்டார்.

“அவர்கள் கூறுவது உண்மை” என்றான் அரச குமாரன். இந்த விடை அரசருக்கு வியப்பை யுண்டாக்கிற்று.

“நீ ஏன் அவ்வாறு செய்கிறாய்?"

66

“தங்களைக் கொல்வதற்காக!”

66

66

6

'எதற்காகக் கொல்லவேண்டும்?”

“அரச பதவிக்காக.”

“பிள்ளையின் பகைமையோடு அரசாள்வது சிறந்ததன்று. நீ விரும்புவதுபோல உனக்கு ஆட்சியைத் தருகிறேன். இன்று முதல் நீயே மகத தேசத்து மன்னன்!”

அரசர் அப்பொழுதே அஜாதசத்துருவிடம் அர சாட்சியைக் கொடுத்துவிட்டார். அன்று முதல் மகத தேசத்தின் மன்னன் அஜாதசத்துரு என்பதை நாட்டில் பறையறைந்து தெரிவிக்கச் செய்தார்.

அஜாதசத்துரு அரசாட்சியைப் பெற்றுக்கொண்டவுடன், தன் தந்தையாகிய பிம்பசார மன்னனுக்கு உயர்ந்த மரியாதைகளைச் செய்தான். ஆனால், தேவதத்தனுக்கு இது பிடிக்கவில்லை. பிம்பசார அரசன் உயிரோடு உள்ளவரையில் தன் எண்ணம் நிறைவேறாது என்று அவன் கருதினான். அவன், அரச பதவியில் இருக்கும் அஜாத சத்துருவிடம் வந்து தனது தீய எண்ணங்களை அவனுக்குக் கூறி அவனை மேலும் குற்றச்செயல்களைச் செய்யத் தூண்டினான்.

66

நீ அரசாட்சியைப் பெற்றுக் கொண்டதினாலே மட்டும் பயன் இல்லை. உன் தந்தை பிம்பசார அரசனிடம் இன்னும் அதிகாரம்