பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இருக்கிறது. அவரைப் பின்பற்றி அவரை ஆதரிப்பவர் பலர் நாட்டில் இருக்கிறார்கள். உன் தந்தை உயிருடன் இருக்கிற வரையில், உனக்கு முழு அதிகாரமும் கிடைக்காது. அது போலவே, புத்தருடைய செல்வாக்கு நாட்டிலே பலமாக இருக்கிறது. அவரை ஒழிக்கும் வரையில் எனக்கும் பௌத்த மதத் தலைமைப் பதவி கிடைக்காது...... என்று பற்பல கொடிய யோசனைகளைக் கூறினான்.

وو

அதிகாரங்களைப் பெறுவதற்குப் பேரவாக் கொண்டிருந்த அரசகுமாரன், தேவதத்தனுடைய யோசனைகளைச் சிந்தித்துப் பார்க்க வில்லை. முழுவதும் ஏற்றுக்கொண்டான். தன் தந்தையைக் கொன்று விட மனம் துணிந்தான். பகவன் புத்தரைக் கொல்வதற் காகத் தேவதத்தனுக்கு உதவி செய்யவும் துணிந்தான்.

தன் தந்தையாகிய பிம்பசார அரசனைப் பட்டினி போட்டுக் கொல்ல முடிவு செய்தான். ஆகவே, தன் தந்தையைச் சிறைச் சாலையில் அடைத்து அவருக்கு ஒருவரும் உணவு கொடுக்கக் கூடாதென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டான்.

அரண்மனையின் ஒருபுறத்திலே பிம்பசார அரசன் அமைத் திருந்த புத்த சேதியத்தை யாவரும் தொழக்கூடா தென்றும் அதற்குச் சிறப்புச் செய்யக்கூடாதென்றும் கண்டிப்பான கட்டளை யிட்டான்.

இந்தப் புத்த சேதியத்திலே (சிறு கோயிலிலே) பிம்பசார அரசர், பகவன் புத்தருடைய, தலைமயிர் ஒன்றைப் பொற் பேழையில் வைத்து அதை நாள்தோறும் போற்றிச் சிறப்புச் செய்துவந்தான். அரண்மனை யில் இருந்தவர் எல்லோரும் இந்தச் சேதியத்தைத் தொழுது வந்தார்கள். புத்தருடைய செல்வாக்கைக் குறைக்கவேண்டும் என்னும் எண்ணத்தோடு அஜாதசத்துரு இந்தச் சேதியத்தை ஒருவரும் தொழக்கூடாதென்று கட்டளை யிட்டான்.

அரசனுடைய ஆணைப்படி ஒருவரும் சேதியத்திற்குச் செல்லவில்லை. சேதியம் பாழடைந்து காணப்பட்டது. திருவலகிட்டுத் தரையைத் தூய்மைப்படுத்தாதபடியினாலே புழுதி படிந்திருந்தது. திருவிளக்கு ஏற்றாதபடியினாலே இருளடைந் திருந்தது.

அரண்மனையிலே ஊழியம் செய்யும் சிறீமதி என்பவள் பகவன் புத்தரிடம் பற்றுடையவள்; மிகுந்த பக்தியுடையவள்; சமயம் கிடைக்கும்போதெல்லாம் புத்தருடைய உபதேசங்களைக் கேட்டு