பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பத்திரை குண்டலகேசி

பதினாறு வயது நிரம்பிய பத்திரை என்னும் கன்னிகை, செல்வம் படைத்த சீமானுடைய மகள். இளமையும் அழகும் செல்வத்தின் செழுமையும் வாய்க்கப்பெற்ற பத்திரை, அந்த ராஜக்கிருக நகரத்துக் கன்னிப்பெண்களுள் சிறந்த அழகுள்ளவள். மேலும், பெற்றோருக்கு ஒரேமகள். வேறு மக்கள் இல்லாத படியினாலே, தாய் தந்தையர் இவளைத் தமது உயிர்போலவும் கண்போலவும் ஆசையோடு வளர்த்து வந்தார்கள். பொருள் வளத்தினால் பெறக்கூடிய எல்லா இன்பங்களை யும் பெற்று, பத்திரை மகிழ்ச்சியோடு காலங்கழித்து வந்தாள்.

ஒரு நாள் அந்த வீதியிலே பெரும் பரபரப்பு உண்டாயிற்று. வீடுகளில் இருந்த ஆண் பெண்களும் சிறுவர் சிறுமிகளும் வெளியில் வந்து நின்று எதையோ ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந் தார்கள். பத்திரையும் தோழிகளுடன் மாளிகையின் மாடியில் நின்று கொண்டிருந்தாள்.

சத்துருகன் என்னும் பெயருள்ள பேர்போன கள்ளன், சேவகர் கையில் அகப்பட்டுக்கொண்டான். கொலைக் தண்டனை விதிக்கப் பட்ட அவனைக் கொலைக் களத்திற்குக் கொண்டு போனார்கள். இதுதான் இந்தப் பரபரப்புக்குக் காரணம். மக்கள் கள்ளனைப்பற்றிப் பலவாறு பேசிக்கொண்டார்கள். “இத்தனைக் காலம் அகப்படாம லிருந்தவன் இப்போது அகப்பட்டுக் கொண்டான். இன்றோடு அவன் ஆயுள் முடிந்தது. எத்தனை வீடுகளைக் கொள்ளையடித்தான்! இன்றோடு இவன் தொல்லை ஒழிந்தது. பல நாள் கள்ளன் ஒரு நாளைக்கு அகப்படாமலா போவான்?” என்று பேசிக் கொண்டார்கள்.

66

இவ்வாறெல்லாம் தெருவில் நின்றவர் பேசிக் கொண்டிருந்தபோது, அதோ வருகிறான்; அதோ வருகிறான்" என்று ஒரு குரல் கேட்டது. எல்லோருடைய கண்களும் அந்தப் பக்கம் திரும்பின. அரசனுடைய சேவகர் கள்ளனைக் கொலைக்களத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அவனுடைய கைகள் பின்புறமாகப் பிணைத்துக் கட்டப் பட்டுள்ளன. உடல்வலிவும் உறுதியான தோற்றமும் உள்ள வாலிபன்