பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

அரசன்:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

"எல்லா அதிகாரமும் இருக்கிறது. எதையும் செய்யலாம் என்னும் இறுமாப்பினாலே மற்றவருக்குத் தீங்கு செய்கிறவன் ஒருநாளும் வாழ மாட்டான். அவன் செயலைத் தெய்வமும் நிந்தித்து இகழும். நான் என் உடல் இன்பத்தைப் பெறாமல் என் உயிரையும் போக்கிக் கொள்ளலாம். ஆனால், அநீதியைச் செய்து அறம் என்னும் நன்னெறியை அழிக்கக் கூடாது.

சேனாபதி:

66

“அறிவு சான்ற ஐய! அவள் என் மனைவி என்னும் காரணம் பற்றி அவளை நீர் மறுப்பதாக இருந்தால், அவளை விலக்கிவிடுகிறேன். அவள் இது முதல் என் மனைவி அல்லள், இப்போது, அவளை அடிமைப் பெண்ணாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்.'

அரசன்:

"என்பொருட்டுக் குற்றம் அற்ற உன் மனைவியை நீர் விலக்கி விட்டால், உலகம் உம்மைப் பழிக்கும். எல்லோரும் உம்மை நிந்தனை செய்வார்கள்.”

சேனாபதி:

“உலகம் பழிக்கும் என்பது பற்றியும், நிந்தனை செய்யும் என்பது பற்றியும் எனக்குக் கவலை இல்லை. யார் எதையும் சொல்லட்டும். அதுபற்றித் துன்பம் இல்லை. சிவியரசே! அவளை ஏற்றுக்கொள்ளும். அரசன்:

“புகழையும் இகழையும் உயர்வையும் இழிவையும் கருதாதவன், வெள்ளம் வந்து அடித்துக்கொண்டு போனபிறகு வெறுந்தரை மட்டும் இருப்பதுபோல, நன்மைகளும் மேன்மைகளும் போய் வெறும் ஆளாய் விடுவான்.'

சேனாபதி:

66

'இன்பம் துன்பம், புகழ்ச்சி இகழ்ச்சி, உயர்வு தாழ்வு ஆகிய எது வந்தாலும், நன்மைகளையும் தீமைகளையும் பொறுத்துக் கொள்ளுகிற பூமியைப்போல, நான் தாங்கிக் கொள்வேன்.

وو