பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

அரசன்:

66

101

'என்னுடைய இன்பத்திற்காக, மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய நான் உடன்பட மாட்டேன். என் மனத்துன்பத்தை நான் தாங்கிக்கொள் வேனே தவிர, அதைத் தீர்க்கும் பொருட்டு மற்றவருடைய உரிமையை யும் அமைதியையும் கெடுக்கமாட்டேன்.

சேனாபதி:

“தெய்வத்துக்குக் காணிக்கை செலுத்துவது போல, அரசர் பெரு மானாகிய உமக்கு உம்மாதந்தியைக் காணிக் கையாகத் தருகிறேன். ஏற்றுக்கொண்டருள்க.'

அரசன்:

“நீர் என்னிடம் அளவுக்கு மீறி அன்பு பாராட்டுகிறீர், நீரும் உமது மனைவியும் எனது நண்பர்கள். நண்பர்களுக்குத் தீங்கும் அநீதியும் செய்கிறவனைத் தெய்வமும் அறிஞரும் பழித்து இகழ்வார்கள்.

சேனாபதி:

"குடிமக்களும் மற்றவர்களும் உம்மை நீதியற்ற அக்கிரமக்காரன் என்று நிந்திக்கமாட்டார்கள். ஏனென்றால், நானாகவே விரும்பி உம்மா தந்தியை உமக்குக் கொடுக்கிறேன். சிலகாலத்துக்குப் பின்னர் அவளைத் திருப்பி அனுப்பிவிடலாம்.'

அரசன்:

66

'அன்பரே, நீர் என்னிடம் சிறுவயது முதல் மிகுந்த அன்பு காட்டி வருகிறீர். அன்பனுக்கு இழிவு செய்தல் ஆகாது. அறநெறியின்படி நடக்கிறவன் புகழ், உலகம் எங்கும் போற்றிச் சிறப்பிக்கப்படும். அநீதி செய்கிறவனை எல்லோரும் நிந்தித்து இகழ்வார்கள்."

சேனாபதி:

“அறிவு சான்ற மன்ன! நன்னெறியில் நின்று நீதி கோணாத நீர் நெடுங்காலம் வாழ்க. உமது புகழ் ஓங்குக! அறவழியிலே என்றென்றும் உலகத்தைக் காத்தருள்க.!”

சிவி அரச குமரன் உம்மாதந்தியின் காதல் மயக்கத்திலிருந்து நீங்கினார்.