பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

66

105

ஐயா, முன்னே வந்த கன்னான் இது அரைக்காசு பெறாது என்று சொல்லித் தட்டைப் போட்டுவிட்டுப் போனான். நல்லவராகிய உமது கை பட்டுத்தான் இது பொன்னாக மாறிற்று. உம்மிடம் உள்ள காசைக் கொடுத்துவிட்டு இந்தத் தட்டை எடுத்துக்கொண்டு போ” என்று கூறினாள் பாட்டி. அச்சமயம் போதிசத்துவரிடம் ஐந்நூறு காசும், சில செம்புப் பித்தளைச் சாமான்களும் இருந்தன. “தராசு, படிக்கல், பை இவைகளை யும் எட்டுக் காசையும் வைத்துக்கொள்கிறேன். மீதியுள்ள காசையும் இந்தச் சாமான்களையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். சம்மதம்தானா?” என்று கேட்டார் போதிசத்துவராகிய கன்னான். பாட்டி இதற்குச் சம்மதப் பட்டாள். ஆகவே, போதிசத்துவர் காசுகளையும் செம்புப் பித்தளைச் சாமான் களையும் கொடுத்து விட்டுத் தட்டை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டு போனார். போனவர் நேரே ஆற்றங்கரைக்குப் எட்டுக்காசு கொடுத்துப்

போய், படகுக்காரனுக்கு ஏறிக்கொண்டார்.

படகில்

وو

அவர் போனபிறகு, பேராசைக்காரக் கன்னான் திரும்பிவந்தான். வந்து, “அரைக்காசு, ஒருகாசு தருகிறேன். அந்தத் தட்டைக் கொண்டுவா என்று பாட்டியிடம் கூறினான். பாட்டி அவனைச் சீறினாள்: “ஆயிரம் காசு பெறுமானமுள்ள அந்தத்தட்டு அரைக் காசு பெறாது என்று கூறினாய். நீ போனபிறகு நேர்மையுள்ள ஒரு நல்ல ஆள் வந்து, அது பொன் தட்டு, ஆயிரம் காசு பெறும் என்று சொல்லி ஆயிரம் காசு கொடுத்துவிட்டுத் தட்டை எடுத் துக்கொண்டு போனார்" என்று கூறினாள்.

இதைக்கேட்ட பேராசையுள்ள கன்னான் இடிவிழுந்த மரம் போலானான். “நூறாயிரம் காசு பெறுமானமுள்ள தங்கத் தட்டை அவன் கொண்டுபோனான். அவன் எனக்குப் பெருநஷ்டத்தை உண்டாக்கி விட்டான்” என்று கூவினான். அவனுடைய உள்ளத்திலே பெருஞ் சினம் மூண்டது. அவன் பொறுமை இழந்து மனக்குழப்பம் அடைந்தான். தன்னிடமிருந்த காசுகளையும் சாமான் களையும் வீசி எறிந்தான். ஆடை அவிழ்ந்து விழுவதையும் பாராமல் தராசுக் கோலைக் கையிலே எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு ஓடினான்.

படகு ஆற்றிலே பாதி வழியைக் கடந்துவிட்டதைக் கண்டு படகுக்காரனைக் கூவிப் படகை இக்கரைக்குக் கொண்டு வரும்படி சொன்னான். ஆனால், படகிலிருந்த போதிசத்துவர் தடுத்து, படகை அக்கரைக்குக் கொண்டுபோகச் சொன்னார். படகு அக்கரைக்குச்