பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

சென்றது. படகு போய்விட்டதைக் கண்ட பேராசைக்காரன் அதிக வருத்தம் அடைந்தான். அவன் இருதயம் துடித்தது. வாயில் இரத்தம் வந்தது. காய்ந்துபோன குளத்தில் களிமண் வெடிப்பதுபோல அவன் இருதயம் வெடித்தது. போதி சத்துவரிடம் அவன் கொண்ட வெறுப்பி னாலும், பகையினாலும் அவன் அவ்விடத்திலே இறந்து அழிந்தான். போதிசத்துவர் பல அறச்செயல்களையும் நற்காரியங்களையும் செய்து பிறகு நற்கதியடைந்தார்.

இக்கதையைக்

கூறிய பிறகு, "நற்கதியடைவதற்குரிய அறநெறியில் முயலாமல் சோம்பலினால் சோர்வு அடைபவர், பேராசை யுள்ள கன்னானைப்போல ஊதியத்தை இழப்பார்கள்” என்று பகவன் புத்தர் கூறினார்.

பிறகு அந்தப் பிறப்பை இந்தப் பிறப்போடு ஒப்பிட்டுக் காட்டினார். அந்தக் காலத்தில் தேவதத்தன் பேராசையுள்ள கன்னானாக வும், ததாகதர் நேர்மையுள்ள கன்னானாகவும் இருந்தோம்” என்று கூறினார்.