பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

133

“இச்செய்தி மக்களுக்கு அறிவிக்கப்படும்” என்று சொல்லித் தூதன் வணங்கி விடைபெற்றுச் சென்றான். தூதன் சென்றபிறகு, வெசந்தர குமாரன் அமைச்சரை அழைத்துக் கூறினார்: "நாளைக்கு எழுநூற்றுத் தானம் செய்ய விரும்புகிறோன். அதற்காக எழுநூறு யானைகளையும் எழுநூறு குதிரைகளையும், எழுநூறு தேர்களையும், எழுநூறு கன்னிகைகளையும், எழுநூறு ஆண்பால் அடிமைகளையும், எழுநூறு பெண்பால் அடிமைகளையும் தானங் கொடுக்க ஆயத்தம் செய்துவைக்க வேண்டும்." மேலும் பொன், பொருள், உணவு, உடுப்பு முதலிய தானங் கொடுக்கத்தக்க பொருள்களையும் ஆயத்தம் செய்து வைக்கவேண்டும். இவ்வாறு அமைச்சரிடம் தெரிவித்தபிறகு, மாதி அரசியார் இருக்கும் அந்தப்புரத்திற்குப் போனார். போய் மாதியாரிடம் கூறினார்: “நாம் உமக்கு அளித்த பொன்னையும் பொருளையும், முத்துக்களையும் நவமணிகளையும், உமது தந்தையார் சீதனமாக அளித்த செல்வங்களையும் மற்றும் உமக்கு உரிய செல்வப் பொருள் களையும் நல்ல இடத்தில் வைத்து விடுக.

و,

"இந்தச் செல்வங்களை எல்லாம் எந்த இடத்தில் சேமித்து வைப்பது?” என்று கேட்டார் மாதி அரசகுமாரி.

துன்புறுகிறவர்களுக்குக்

"தக்கவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு, வறுமையால் வாடித் கொடுப்பதுதான் இப்பொருள்களை வைக்கவேண்டிய இடம்” என்று கூறினார் போதிசத்துவராகிய இளவரசர். “நல்லது” என்று மாதியார் ஒப்புக்கொண்டார்.

பிறகு, இளவரசர் மாதியைப் பார்த்துக் கூறினார்: “மாதி! உமது மக்களிடத்தில் அன்பாக இரு. எமது பெற்றோராகிய உமது மாமனார் மாமியாரிடத்திலும், நாம் வணக்கமாக இருப்பது போலவே, வணக்கமாக நடந்து கொள். நாம் போய்விட்ட பிறகு உம்மை ஒருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லையானால், நீரே உமக்கு விருப்ப முள்ள கணவன் ஒருவனைத்தேடி மணந்து கொள்.” இதைக்கேட்டு மாதியார், ‘என் தலைவர் ஏன் இவ்வாறு கூறுகிறார்?' என்று தமக்குள் எண்ணி, “தலைவரே! ஏன் தாங்கள் இவ்வாறு கூறத்தகாதவற்றைக் கூறுகிறீர்?” என்று வினவினார்.

"நாம் அரசாங்கத்துக்குரிய யானையைத் தானங்கொடுத்த படியால், நாட்டு மக்கள் சீற்றங்கொண்டு நம்மை நாடுகடத்தப் போகிறார்