பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

137

“என்னுடைய ஆசி நிறைய உண்டு. மாதியையும் குழந்தை களையும் இங்கே விட்டுவிட்டுப் போ.'

“மாதிக்கு விருப்பமிருந்தால் இங்கேயே இருக்கட்டும். இல்லை யானால், என்னுடன் வரட்டும்.'

99

சஞ்சய அரசன், மாதியை அரண்மனையில் தங்கும்படிக் கூறினார். “மென்மையான உன் உடம்பு, மரவுரி உடுத்திப் புழுதியிலும் அழுக்கிலும் புழுங்குவதற்கு ஏற்றதல்ல” என்று கூறினார்.

"இளவரசர் இல்லாத இடம் எனக்குச் சுகமான இடம் அல்ல" என்று கூறினார் மாதியார்.

அரசன் காட்டின் துன்பங்களை விளக்கிக் கூறினார்: “அங்கே புழுக்களும் பூச்சிகளும் ஈக்களும் கொசுக்களும் எறும்புகளும் வண்டு களும் நிறைய உண்டு. அவை கடித்தால், உன்னால் நோவு பொறுக்க முடியாது. விஷப்பாம்புகளும் மலைப்பாம்பு களும் உண்டு. சடை பிடித்த கரிய மயிருள்ள கரடிகள் கொடி யவை. மரத்தின்மேல் ஏறிக் கொண்டாலும், மரமேறி வந்து ஆளை அடித்துக் கொல்லும். கடாமான்கள் கூர்மையான கொம்புகளால் குத்திக் கொல்லும். குரங்குக் கூட்டங்களுக் கிடையில் அகப்பட்டுக் கொண்டால், அவை உன்னை அச்சுறுத்திப் பயப்படுத்தும். நரியின் கூச்சலைக் கேட்டாலும் அஞ்சி நடுங்கும் நீ அங்கே போனால் என்ன ஆவாய்! பட்டப்பகலிலும், பறவைகள் அமைதியாக இருக்கும்போதும், காடு பயங்கரமானது. நீ ஏன் அங்கே போகிறாய்? காட்டு வாழ்க்கை துன்பகரமானது.

மாதியார் கூறினார்: "காட்டு வாழ்க்கை கடினமானதுதான். ஆனாலும் இவருடனே நான் போவேன். கணவனுக்கு ஊழியம் செய்ய, என் கடமையைச் செய்ய நான் கடமைப் பட்டிருக்கிறேன். சாணி எடுத்து வரட்டி தட்டியும், நெருப்பு மூட்டிச் சமைத்தும், நீரை முகந்து எடுத்தும் நான் வேலை செய்வேன். கணவன் இல்லாத வாழ்க்கை, அரசு இல்லாத நாடும், நீர் இல்லாத ஆறும் போன்று வெறுமையானது. செல்வத்தில் வாழ்ந்தாலும் வறுமையில் வாடினாலும் கணவனுட ன் இருப்பதுதான் மனைவியின் கடமை. இளவரசர் நாடு கடத்தப்பட்டால் நானும் நாடு கடத்தப்பட்டவள்தான்.

"அப்படியானால் குழந்தைகளை இங்கே விட்டுவிட்டுப் போங்கள்” என்று கூறினார் அரசர்.

6