பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

143

வெசந்தர குமரன் மனைவி மக்களுடன் வடக்கு நோக்கிப் புறப் பட்டார். காட்டில் நடந்துசென்று விபுல மலைச்சாரலையடைந்து கேதுமதி யாற்றங்கரையைச் சேர்ந்தார்கள். அங்கு, அழகான அந்த ஆற்றங்கரை யில் தங்கி இளைப்பாறினார்கள். அவர்களுடன் சென்ற ஆள் காட்டிலிருந்து பறித்துவந்த பழங்களை, அருந்திப் பசி நீங்கினார்கள். அந்த ஆளுக்குத் தனது பொன்கொண்டை ஊசியை வெகுமதியாக அளித்தார் இளவரசர். பிறகு, ஆற்றில் நீரருந்தி, நீராடிய பின்னர் வழி நடந்தார்கள். அமைதியோடும் கவனமாகவும் ஆற்றைக் கடந்து குன்றின் மேல் உள்ள ஆலமரத்தின் கீழே தங்கினார்கள். அங்கு ஆலம் பழத்தைத் தின்றார்கள். அங்கிருந்து புறப்பட்டுச் சென்று நாக மலையை அடைந்தார்கள். பிறகு, அங்கிருந்து போய் முசலிந்த ஏரிக்கரையை அடைந்தனர். அந்த ஏரியின் வடகிழக்கு மூலையாகச் சென்று, காலடிப் பாதை வழியே நடந்து காட்டுக்குள் நுழைந்தனர். காட்டையடைந்து அங்குள்ள அருவியின் பக்கமாக நடந்து அவ்வருவி உற்பத்தியாகிற இடத்தையடைந்து, அப்பால் அழகான ஏரிக்கரையைச் சேர்ந்தார்கள்.

99

அப்போது தேவர்களின் அரசனாகிய சக்கன் (இந்திரன்), இங்கு நிகழ்ந்ததை அறிந்து தனக்குள் எண்ணினான்: 'போதி சத்துவர் இமயமலைச்சாரலுக்குப் போகிறார். அவர் அங்கே தங்குவதற்கு இடம் அமைத்துக் கொடுக்கவேண்டும்.' இவ்வாறு எண்ணிய சக்கன், தேவ சிற்பியாகிய விசுவகர்மனை அழைத்து, "வங்கமலைக் காட்டில் முனிவர் தங்கி இருப்பதற்கு ஒரு நல்ல இடம் அமைத்துவிட்டு வருக' என்று கூறினார். அவ்வாறே விசு வகர்மனும் இமயமலைச்சாரலுக்கு வந்து, அழகான இயற்கைச் சூழ்நிலையுள்ள இடத்தில் இரண்டு குடிசைகளை அமைத்தான். அக்குடிசைகளில், பகல் வேளையில் இருப்பதற்கு ஒரு அறையையும் இரவில் படுத்து உறங்குவதற்கு மற்றொரு அறையையும் வகுத்தான். குடிசைகளுக்கு அருகில் வாழை முதலிய மரங்களையும், பூச்செடிகளையும் நட்டான். ஆசிரமத்திலிருந்து ஏரிக்குச் செல்ல சிறு பாதைகளையும் அமைத்தான். இவற்றை யெல்லாம் செய்து முடித்தபிறகு, ஒரு பலகையில், "தவம் செய்ய விரும்பு வோர் இந்த ஆசிரமத்தில் தங்கி இருக்கலாம்” என்று எழுதிக் குடிசையின் வாயிற்புறத்தில் வைத்துவிட்டுச் சென்றான்.

வெசந்தர குமாரனாகிய போதிசத்துவர் மனைவி மக்களுடன் ஏரிக்கரைக்கு வந்தார். அங்கிருந்து வழி போவதைக்கண்டு அந்த