பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

147

ஏற்பாடு செய்யும். இல்லாவிட்டால் இந்த வீட்டை விட்டு நான் போய் விடுவேன். நான் போய்விட்டால் கிழவராகிய உமக்குப் பணிவிடை செய்ய யார் இருக்கிறார்கள் நீர் கஷ்டப் பட வேண்டியதுதான்” என்று கண்டிப்பாகக் கூறினாள். கிழப் பிராமணன் சிந்தித்துப் பார்த்தார்.

66

கட்டும் அடி. வங்கமலைக் காட்டுக்குப் போய் வெசந்தர ராஜாவிடம் ஒரு அடிமையாளைத் தானம் வாங்கி வருகிறேன். போய்த் திரும்பிவரப் பல நாட்கள் செல்லும். வெல்லம் போட்டுத் தித்திப்பு அடை செய்துகொடு.”

அவன், வழிப் பயணத்தில் சாப்பிடுவதற்காக, அவள் அடை களைச் செய்து மூட்டைகட்டிக் கொடுத்தாள். ஜூஜூகன், தன் குடிசை யின் பிய்ந்துபோன இடங்களை எல்லாம் சரிப்படுத்திக் கதவை ஒழுங்கு செய்து வீட்டில் ஒருவரும் நுழையாதபடி செப்பம் செய்தான். அவள் கொடுத்த அப்பங்களை வாங்கிப் பையில் போட்டுத் தோளில் மாட்டிக் கொண்டு, அவளை வலமாகச் சுற்றிப் புறப்பட்டான். “வீட்டில் பத்திரமாக இரு. அகால வேளையில் வெளியே போகாதே” என்று சொல்லி அவளிடம் விடைபெற்றுப் புறப்பட்டான். நெடுந்தூரம் நடந்து சென்றான். அவன் போகிற வழியில் சிவி நாடு இருந்தது. அந்த நாட்டில் புகுந்து தலைநகரமாகிய ஜேதுத்தர நகரத்தை யடைந்தான். ஜனங்கள் கூட்டமாக இருந்த இடத்தையடைந்து, "வெசந்தரராஜா எங்கே இருக்கிறார்?” என்று கேட்டான். இவன் கலிங்கத்திலிருந்து வந்தவன் என்பதை அறிந்த அவர்கள் கூறினார்கள்: "கலிங்க நாட்டுப் பார்ப்பனர்களால்தான் எங்கள் வெசந்தரகுமாரன் வங்கமலைக்குப் போகும்படி நேரிட்டது. அவர்கள் வந்து எங்கள் வெள்ளை யானையைத் தானமாக வாங்காமலிருந்தால், அவர் எங்கள் ஊரிலேயே இருப்பார். போதாக்குறைக்கு நீயும் வந்துவிட்டாயா?” என்று கூறி அவர்கள் அவனைத் தடியாலும் கொம்பாலும் அடித்துத் துரத்தி விரட்டி னார்கள்.

வெசந்தரகுமாரன் வங்கமலைக் காட்டில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு பார்ப்பனன் அக்காட்டுக்குச் சென்றான். காட்டில் வழி தெரியாமல் இடர்ப்பட்டான். ஒருவாறு வழி தெரிந்து காட்டில் நெடுந் தூரம் சென்றான். "வெயிலில் நடந்து களைப்படைந்தவருக்கு நிழல் கொடுத்து உதவும் ஆலமரம்போல, இரப்பவருக்குத் தானங்கொடுத்து உதவும் வெசந்தரகுமாரன் எங்கே இருக்கிறார்?” என்று உரத்துக்