பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

149

அடையைச் சாப்பிடு” என்று தன்னிடமிருந்த அடையைக் கொடுத்தான். வேடன், “எனக்கு அடை வேண்டாம். தேனையும் மான் கால் இறைச்சியையும் எடுத்துக் கொள்ளும்” என்று கூறி அவற்றைக் கொடுத்தான்.

பார்ப்பனன் அதைப் பெற்றுக்கொண்டு வழிநடந்தான். “இடை வழியிலே ஒரு முனிவர் ஆசிரமம் இருக்கிறது. அவரிடம் கேட்டால், வெசந்தரகுமாரர் இருக்கும் வழியைக் காட்டுவார்" என்று வேடன் மீண்டும் சொன்னான். நல்லது என்று பார்ப்பனன் வழி நடந்தான். நெடுந் தூரம் சென்று முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான்.

ஆசிரமத்தில் சென்று அச்சதர் என்னும் அம்முனிவரைக் கண்டு வணங்கினான். முனிவர், இவன் வந்த காரியத்தைக் கேட்டபோது, வெசந்தரகுமாரனைக் காண வந்ததாகக் கூறினான். “நீர் அவரைப் பார்க்க வந்தது நல்ல காரியத்துக்காக அல்ல என்று தோன்றுகிறது. அவரிடத்தில் இப்போது தானமாகக் கொடுக்க ஒன்றும் கிடையாது. அவருடைய மனைவியை அல்லது மக்களைத் தானமாகப் பெற்றுக் கொண்டு போய் வீட்டில் வேலையாளாக வைக்க எண்ணி வந்தீர் போலும்” என்று முனிவர் கூறினார். அவரிடத்திலும் பார்ப்பனன் பொய் பேசினான். “இல்லை இல்லை. நான் ஒருவருக்கும் தீமை செய்ய வர வில்லை. நல்லவர்களைக் காண்பது மனத்துக்கு மகிழ்ச்சி. ஆகையால், கொடை வள்ள லாகிய அவரைக் காணவந்தேன்" என்று அவன் பொய் பேசி னான். முனிவரும் அதனை உண்மை என்று நம்பி, வெசந்தர குமாரன் இருக்கும் ஆசிரமத்திற்குப் போகும் வழியைக் கூறினார்.

ஜூஜூகன் அவர் கூறிய வழியே சென்று கடைசியில் ஏரியண்டை வந்து சேர்ந்தான். அவன் தனக்குள் எண்ணினான்: 'இப் போது மாலை நேரம் ஆகிவிட்டது. இப்போது ஆசிரமத்திற்குப் போனால், பிள்ளை களின் தாய் அங்கே இருப்பாள். பிள்ளைகளைத் தானம் செய்வதைத் தாயானவள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டாள். நாளைக் காலையில், மத்தி காய்கனிகளைப் பறிக்கக் காட்டுக்குப் போனபிறகு, வெசந்தர அரசனிடம் போய் மக்களைத் தானம் பெறுவேன்.' இவ்வாறு எண்ணிய அவன், அருகில் இருந்த ஒரு சிறு குன்றின்மேல் ஏறி அங்கே சமதரை யிலே ஒரு வாய்ப்பான இடத்தில் படுத்து உறங்கினான்.

அன்று விடியற்காலையில் மத்தி, துன்பகரமான கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தாள். அந்தக் கனவு இது: கருநிறமுள்ள ஒரு ஆள்,