பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

இரண்டு மஞ்சள் ஆடைகளை அணிந்து, இரண்டு காதுகளிலும் சிவந்த நிறமுள்ள பூக்களைச் செருகிக்கொண்டு, குடிசைக்குள் நுழைந்து மத்தியின் தலைமயிரைப் பிடித்துக் கொண்டு இழுத்து வெளியே வந்து கீழே தள்ளி, அவள் கதறக் கதறக் கண்களைப் பிடுங்கி, இரண்டு கைகளையும் வெட்டி, மார்பைப் பிளந்து இரத்தம் சொட்டச் சொட்ட அவள் இதயத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான். இத்தகைய பயங்கரக் கனவைக் கண்ட மத்தி, விழித்தெழுந்து கணவன் இருந்த குடிசையின் கதவைத் தட்டினாள்.

“யார் அது?” “நான்தான் மத்தி.” “இந்த நேரத்தில் இங்கு ஏன் வந்தாய்?” “பொல்லாத கனவு கண்டேன். அதைச் சொல்ல வந்தேன்." “என்ன கனவு சொல்லு?”

மத்தி, தான்கண்ட கனவைக் கூறினாள். இதைக்கேட்ட போதி சத்துவர் தமக்குள் எண்ணினார்: 'இன்று என்னுடைய தானப் பாரமிதை நிறைவுறப் போகிறது. இன்று ஒரு இரவலன் வந்து என் மக்களைத் தானங்கேட்டு வாங்கிக்கொண்டு போகப் போகிறான். ஆனால் மத்தியைச் சமாதானப்படுத்தி அனுப்ப வேண்டும். 'இவ்வாறு தமக்குள் எண்ணிய போதி சத்துவர் இவ்வாறு கூறினார்: “மத்தி! நீ ஒன்றுக்கும் அஞ்சாதே. வயிற்றில் உணவு சமிக்காதபடியினாலோ, உறக்கம் இல்லாத படியினாலோ, இந்தக் கனவு ஏற்பட்டது. அதுபற்றிக் கவலைப்படாதே, போ என்று கூறி மனத்திற்குச் சாந்தி

உண்டாக்கினார்.

பொழுது புலர்ந்தது. மத்தி வீட்டு வேலைகளை எல்லாம் வழக்கம் போல செய்து முடித்துவிட்டு, சிறுவர்களை அழைத்துக் கட்டித் தழுவி முத்தமிட்டாள். "நேற்று இரவு தீய கனவு கண்டேன். பத்திரமாக இருங்கள்” என்று அவர்களிடம் கூறினாள். அவர்களைத் தமது கணவனிடம் கொண்டுபோய் விட்டு, விழிப்பாக இருந்து அவர்களைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள். பிறகு, மண் வெட்டியை யும் கூடையையும் எடுத்துக்கொண்டு, நீர் வடியும் கண்ணைத் துடைத்துக் கொண்டு காட்டுக்குள் போனாள்.

மத்தி, காட்டுக்குப் போய் இருப்பாள் என்பதை அறிந்து ஜூஜூகன் ஆசிரமத்தை நோக்கி வந்தான். போதிசத்துவர் வெளியே வந்து அங்கிருந்த பெரிய பாறைக்கல்லின்மேல் அமர்ந்தார். அவருக்கு அருகில் அவருடைய சிறுவர்களிருவரும் விளையாடிக் கொண்டிருந்