பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

தாழ்ந்தவர்களுக்கு அவள் வாழ்க்கைப்படக் கூடாது. அவளை விடுதலை செய்து மணம்புரிய விரும்புவோர் நூறு ஆண் அடிமைகளையும், நூறு பெண் அடிமைகளையும், நூறு யானை, நூறு குதிரை, நூறு எருதுகளையும், நூறு காணம் பொன்னையும் கொடுத்து விடுதலை செய்ய வேண்டும்” என்று அவர்களின் விடுதலைக்குரிய தொகையையும் தெரிவித்தார்.

பிறகு, சிறுவர்களை அழைத்துக்கொண்டு ஆசிரமத்துக்கு வந்தார். பார்ப்பனனை அருகில் அழைத்து அவன் கையில் செம்பிலிருந்து நீர்வார்த்து, “என் அருமை மக்களைவிட நூறு மடங்கு, நூறாயிரம் மடங்கு புண்ணியத்தைப் பெறுவேனாக” என்று சொல்லித் தமது உயிர்போன்ற மக்களை அவனுக்குத் தானமாக வழங்கினார்.

அப்போது நிலம் நடுங்கிற்று. வானம் துலங்கிற்று. பயங்கர மான ஓசை உண்டாயிற்று. தமது கண்மணிகளாமக்களைத்தானம் வழங்கிய போதிசத்துவர் தமது மக்களைப் பார்த்தவண்ணம் (சிறிதும் மனம் கலங்காமல்) அவர்களைத் தானம் கொடுத்ததற் காக மனம் மகிழ்ந்தார்.

சிறுவர்களைத் தானம்பெற்ற பார்ப்பனன், அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். காட்டில் வளர்ந்திருந்த உறுதியான கொடியைக் கடித்து ஒடித்து அதனால் ஜாலியின் வலது கையையும் கண்ணாவின் இடது கையையும் சேர்த்துக் கட்டினான். வேகமாக நடக்கும்படி, அந்த உறுதியான கொடியினால் ஆடுமாடுகளை ஓட்டுவதுபோல, தந்தையின் கண் முன்பாகவே முதுகில் அடித்தான். சுரீர் என்று பட்ட அடி அவர்களின் தோலைக் கிழித்து இரத்தம் கசிந்தது. அவர்கள் கதறி அழுதார்கள். அடிபட்ட இடத்தைக் கையினால் தடவி விட முடியாமல் சிறுவர்கள் முதுகோடு முதுகை உராய்ந்து கொண் டார்கள். இவ்வாறு காட்டில் போகும்போது, பார்ப்பனன் கால் இடறிக் கீழே விழுந்து புரண்டான். அந்தச் சமயத்தில் அவர்கள் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு ஓடிப்போய் தந்தையின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதார்கள்.

66

'அப்பா! அம்மா வருகிறவரையில் இங்கேயே இருக்கிறோம். அம்மா இல்லாதபோது எங்களை அனுப்பவேண்டாம். அம்மா வந்தபிறகு நாங்கள் போகிறோம். பிறகு, இந்தப் பார்ப்பான் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஐயோ! அவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே! தொந்தி வயிறும் தொங்குகிற சதையும் கண்ணும்