பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

159

அப்போது, போதிசத்துவர், 'கடுமையாகப் பேசி, குழந்தைகளைப் பற்றிய வருத்தத்தை ஆற்றவேண்டும்' என்று தமக்குள் எண்ணிக் கொண்டு, இவ்வாறு கேட்டார்: “மத்தி! காலையில் காட்டுக்குப் போன நீ, ஏன் இவ்வாறு நேரங்கழித்து வந்தாய்?”

66

வருகிற வழிலே புலியும், சிங்கமும், சிறுத்தையும் படுத்துக் கொண் டிருந்தன. அவை உறுமிக் கர்ச்சித்த கர்ச்சனைகளைத் தாங்களும் கேட்டிருப்பீர்களே! அவைகளுக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருந் தேன். குழந்தைகளை அவை கொல்லாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன். மாலை நேரம் ஆன பிறகுதான் அந்தத் துஷ்ட மிருகங்கள் எழுந்து போய்விட்டன. பிறகு, நான் ஓடோடி வந்தேன்.'

وو

6

போதிசத்துவர் அன்றிரவு முழுவதும், தாம் சிறுவர்களைத் தானங் கொடுத்த செய்தியைச் சொல்லவில்லை. மத்தி குழந்தை களைக் காணாமல் அழுதாள்.

66

"வெள்ளாட்டுத் தோலினால் சட்டை தைத்து உடுத்தினேன். உண்பதற்காகக் காட்டிலிருந்து கிழங்குகளையும் பழங்களையும் கொண்டு வந்து கொடுத்தேன். விளையாடுவதற்குக் காட்டிலிருந்து காய்களையும் பூக்களையும் பறித்து வந்து கொடுத்தேனே! செந் தாமரைப் பூவையும் வெண் தாமரைப் பூவையும் அவர்களுக்குக் காடுத்தீர்களே! ஜாலிக்கு வெள்ளைநிற அல்லிப் பூவையும் கண்ணாவுக்கு நீலநிற அல்லிப் பூவையும் கொடுத்தீர்களே! பூமாலைகளை அணிந்து கொண்டு அவர்கள் கூத்தாடிச் சிரித் தார்களே! கண்ணா இனிமையாகப் பாடுவதைக் கேட்டு மகிழ்வோமே! கண்மணிக் குழந்தைகளைக் காணவில்லையே! நாடு கடத்தப்பட்டுக் காட்டுக்கு வந்தது முதல் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தோம். இந்தத் துக்கம் பொறுக்க முடியவில்லையே! கண்ணாவும் ஜாலியும் எங்கே போனார்கள்? நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேனோ, என் தலை விதி என் குழந்தை களைக் காணாமல் தவிக்கிறேன்.’

இவ்வாறெல்லாம் கூறி மத்தி அழுதுங்கூட அவளுக்குப் போதி சத்துவர் உண்மையைச் சொல்லாமல் வாளா இருந்தார். மத்தி, நடுக்கத் தோடு அழுதுகொண்டு, நிலா வெளிச்சத்திலே, அச்சிறுவர்களைத் தேடிக்கொண்டு வழக்கமாக அவர்கள் விளையாடுகிற இடங்களில் எல்லாம் போய்த் தேடினாள். அவர்கள் விளையாடின மரங்கள்,