பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

அன்று, அரசர் பெருமான் அரசவையிலே அமர்ந்திருந்த போது, ஜூஜூகப் பார்ப்பனன் சிறுவர்களுடன் அங்கு வந்தான். சிறுவர்களைத் தூரத்தில் கண்ட அரசர் கூறினார்: “தங்கப் பதுமைகள்போலக் காணப் படுகிற இந்தச் சிறுவர்கள் யார்? சிங்கக் குட்டிகள்போல் தோன்றுகிற இவர்கள் யார்? ஜாலியைப் போலவும், கண்ணாவைப் போலவும் இருக்கிறார்களே?" என்று கூறி, அவர்களை அருகில் அழைத்துவந்த போது, அரசர் கூறினார்: "ஓய் பிராமணா! இந்தச் சிறுவர்களை எங்கிருந்து கொண்டுவருகிறாய்?"

“பதினைந்து நாட்களாக இவர்களைக் காட்டிலிருந்து அழைத்து வருகிறேன். இவர்களைத் தானமாக வாங்கி வருகிறேன்" என்று கூறினான் ஜூஜகன்.

அரசன்: “யாரும் குழந்தைகளைத் தானம் கொடுக்க மாட் டார்களே? யாரிடம் இவர்களைத் தானம் பெற்றாய்?"

ஜூஜூகன்:

ஜகன்: "யாருக்கும் இல்லை என்று மறுக்காமல் தானம் வழங்குகிற வெசந்தரகுமாரன், காட்டில் வசிக்கிறார். அவரிடம் இச் சிறுவர்களைத் தானமாகப் பெற்றேன்.'

இதைக் கேட்டவுடன் சபையில் இருந்தவர் திடுக்கிட்டனர். பிறகு, சினம்கொண்டு பேசிக்கொண்டார்கள்: "பொன்னைப் பொருளைத் தானம் கொடுக்கலாம். யானை, குதிரைகளைத் தானம் கொடுக்கலாம். மனிதர்களில் அடிமையாக உள்ளவர்களைத் தானமாகக் கொடுக்கலாம். தான் பெற்ற குழந்தைகளை எப்படித் தானம் வழங்கலாம்?”

அப்போது தன்னுடைய தந்தையைக் குறை கூறுவதைப் பொறாமல், ஜாலி கூறினான்: "அவரிடம் யானை, குதிரை, அடிமை யாட்கள் இல்லாதபோது எதைத் தானம் கொடுப்பார்?'

அரசன்: “குழந்தாய், உன் தந்தையைக் குறை கூறுவதற்கு இல்லை. உங்களைத் தானம் செய்தபோது அவர் மனம் எப்படி இருந்தது?”

ஜாலி “சொல்ல முடியாத துன்பம் அடைந்தார். உணர்ச்சியை அடக்கிக்கொண்டு, கண்ணீர் வடிய வடியத்தான் எங்களைத் தானமாகக் கொடுத்தார்.”