பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

165

ஜூஜூகப் பார்ப்பான் சிறுவர்களை இழுத்துத் தன்னிடம் நிறுத்திக் கொண்டான். அரசன், “குழந்தைகளே! ஏன் தூரத்தில் நிற்கிறீர்கள். இங்கே வந்து என் மடிமீது அமருங்கள்.

ஜாலி “நாங்கள் அரசகுலத்தில் பிறந்தவர்கள்தாம். எங்கள் அம்மா அரசி. எங்கள் அப்பாவும் அரசர். ஆனால், இப்போது நாங்கள் அடிமைகள்.

وو

அரசன்: “குழந்தாய் அப்படிச் சொல்லாதே. என் மனம் வேகிறது. இப்போது நீங்கள் அடிமைகள் அல்லர். உங்களைத் தானம் கொடுத்த போது உங்கள் தகப்பனார், உங்களை மீட்பதற்கு எவ்வளவு விலை மதிப்பு கூறினார்?

ஜாலி “எனக்கு விலை ஆயிரம் பொன், தங்கைக்கு விலை நூறு யானை, நூறு குதிரை, நூறு எருது, நூறு ஆண் அடிமை கள், நூறு பெண் அடிமைகள், இவற்றோடு ஆயிரம் பொன்.'

وو

அரசர் பெருமான் அவ்வாறே பொன்னையும் பொருளையும் ஜூஜூகனுக்குக் கொடுக்கும்படி அமைச்சருக்குக் கட்டளை யிட்டார். அன்றியும், ஒரு மாளிகையையும் அவனுக்குத் தானமாகக் கொடுத்தார். பிராமணன் அவற்றைப் பெற்றுக்கொண்டு மாளிகையில் தங்கினான்.

அடிமையிலிருந்து விடுபட்ட இளைஞர்கள் நீராடிப் பட்டுடுத்தி, அறுசுவை உணவு அருந்தினார்கள். அரசர் பெருமான் ஜாலியையும், அரசியார் கண்ணாவையும் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்கள். அப்போது அவர்கள், தமது மகனைப் பற்றியும், மருமகளைப் பற்றியும் விசாரித்தார்கள். "மத்தியும் வெசந்தரகுமாரனும் சுகமாய் இருக்கிறார்களா? காட்டிலே துன்பம் இல்லாமல் இருக்கிறார்களா?"

"சுகமாக இருக்கிறார்கள். அம்மாவுக்கு வேலை அதிகம். அம்மா நாள்தோறும் காட்டுக்குப்போய் கிழங்குகளையும் பழங் களையும் கொண்டு வருவார்கள். ஏரியிலிருந்து நீர் கொண்டு வருவார்கள். நெருப்பு மூட்டிச் சமைப்பார்கள். எல்லோரும் பழங்களையும் கிழங்குகளையும் உண்போம். வெயிலிலும் காற்றிலும் காட்டில் அலைந்து அம்மாவுக்கு உடம்பு மெந்து விட்டது. உடம்பு நிறம் மாறிவிட்டது. நீண்ட தலைமயிர் முள்ளில் சிக்கி அறுந்துவிட்டது. தரையில்படுத்து உறங்குவார்" என்று ஜாலி சொன்னான் பிறகு, பாட்டனாரைப் பார்த்து, "உலகத்திலே தகப்பன்மார்