பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

27

தந்தையரைப் போற்றிக் காப்பாற்றி நற்கதியடைவேன்.' இவ்வாறு எண்ணிய அவர், உடனே புறப்பட்டு வழிநடந்தார். நெடுந்தூரம் இருந்த வழியைக் கடந்து சாவித்தி நகரத்துக்கு அருகில் வந்து சேர்ந்தார். அங்குவழி இரண்டாகப் பிரிந்து ஒரு வழி ஜேதவனத் துக்கும், மற்றொரு வழி சாவித்தி நகரத்துக்கும் போகிறது. முதல் எங்கு போவது என்று யோசித்துக் கடைசியில் ஜேத வனத்தில் போய் பகவன் புத்தரைப் பார்த்தபிறகு நகரத்துக்குப் போய்ப் பெற்றோரைப் பார்ப்பது என்று முடிவு செய்து, அவ்விதமே ஜேதவனம் சென்றார்.

ஜேதவன ஆராமத்தில் பகவன் புத்தர் மாதிபோத்தக சூத்திரத்தை உபதேசம் செய்துகொண்டிருந்தார். அதில், துறவு பூண்டோரும், துறவு நிலையில் இருந்து கொண்டே பெற்றோ ரைக் காப்பாற்றலாம் என்பதை விளக்கினார். அதைக்கேட்ட பிக்கு, துறவியாக இருந்துகொண்டே தமது பெற்றோரைக் காப்பாற்ற முடிவு செய்துகொண்டு தமது பெற்றோரைத் தேடிக்கொண்டு சாவித்தி நகரம் சென்றார். தெருவில், பிக்குவின் முறைப்படி பிச்சை ஏற்றுக்கொண்டே போய், தமது பெற்றோர் இருந்த வீட்டுக்கு வந்தார். அவ்வீட்டில் வேறு யாரோ இருந்தார்கள். வீட்டுக்கு எதிரில், சுவர்ப்பக்கத்தில், தெருவின் ஓரத்தில் ஒரு கிழவனும் கிழவியும் உட்கார்ந்திருந்தனர். கிழவி பிச்சை எடுத்து வந்த உணவைச் சமைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் தமது பெற்றோர் என்பதை அறிந்து அவர்கள் நிலைமைக்கு மிகவும் மனம் வருந்தி, அங்குச் சென்று மெளனமாக நின்றார். இவரது கண்களில் நீர் வழிந்தது. அவர்கள் இவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இவர் பிச்சைக்காக நிற்கிறார் என்று எண்ணிய அந்தக் கிழவி, உமக்குக் கொடுக்கத்தக்க உணவு எங்களிடம் இல்லை, போய் வா என்று கூறினாள். அப்போது அவருக்குத் துக்கம் முன்னைவிட அதிகமாக மூண்டெழுந்தது. அதை அடக்கிக் கொண்டு, கண்களில் நீர்வழிய அங்கேயே நின்றார். இரண்டாம் தடவையும் மூன்றாம் தடவையும் போகச் சொன்ன போதும் அவர் அங்கேயே நின்றார்.

66

ஐயா,

கிழவன், “இது உன்மகன்போலத் தெரிகிறது. கிட்டே போய்ப்பார்” என்று கூறினார். கிழவி, அருகில் வந்து பார்த்துத் தன் மகன் என்பதை அறிந்து அவர் கால் விழுந்து கதறி அழு தாள். கிழவனும் அழுதான். துறவியாகிய மகனும் உணர்ச்சியை அடக்கமுடியாமல் அழுது புலம்பினார். பிறகு, தான் பிச்சை ஏற்றுக்கொண்டு வந்த உணவை அவர்களுக்குக் கொடுத்து உண் பித்து, அவர்களை அங்கேயே