பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

துகூலகன் வேட்டைக்குப் போவதில்லை; மான் மரை முதலிய மிருகங்களைக் கொல்வதில்லை. ஆற்றில் மீன் பிடிப்பது இல்லை. வீட்டிலுள்ளவர் மீன் பிடித்துக்கொண்டு வந்தால், அதைக் கொண்டு போய் விற்பதும் இல்லை. அவனுடைய பெற்றோர் மனக்கவலை யடைந்தனர். “நீ வேடர் குலத்தில் பிறந்தும் வேட்டையாடுவதில்லை. குடும்ப வாழ்க்கையை நீ வெறுத்து இருக்கிறாய். இப்படி இருந்தால் குடும்பம் எப்படி நடக்கும்? பிற்காலத்தில் உன்னுடைய வாழ்க்கையை எப்படி நடத்துவாய்?" என்று அவர்கள் அவனைக் கேட்டார்கள்.

“எனக்குக் குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லை. நீங்கள் உத்தரவு கொடுத்தால் இப்பொழுதே நான் காட்டுக்குப் போய்த் துறவியாக வாழ்வேன்” என்று கூறினான் துகூலகன் அவர்களும் அவன் விருப்பத்துக்கு இசைந்தார்கள். ஆகவே, துகூலகனும் பாரிகையும் அவர்களை வணங்கி விடைபெற்றுக் காட்டுக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் கங்கைக்கரை வழியே நடந்து இமயமலைப் பக்கமாகச் சென்றார்கள். கடைசியாக, மிகசம்மத என்னும் சிற்றாறு மலையிருந்து ஓடிவந்து கங்கையாற்றுடன் கலக்கிற இடத்தில் வந்தார்கள். அங்குக் கங்கை ஆற்றைவிட்டு மிகசம்மத ஆற்றங்கரை வழியே நடந்தார்கள்.

அப்போது தேவலோகத்திலே சக்கன் (இந்திரன்) அமர்ந் திருந்த சிம்மாசனம் சூடு கொண்டது. சக்கன் அதன் காரணத்தை யறிந்தான். அவன், தேவலோகத்துச் சிற்பியாகிய விசுவகர்மனை அழைத்துக் கூறினான்: “இரண்டு பெரியவர்கள், இல்லற வாழ்க்கையைத் துறந்து இமயமலைச் சாரலுக்குப் போகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு இடம் அமைத்துக் கொடுக்கவேண்டும். மிகசம்மத ஆற்றங்கரையிலே இத் துறவிகளுக்கு தகுந்த இடத்தில் குடில் அமைத்துவிட்டு வருக இந்திரன் கட்டளைப்படியே விசுவகர்மனும் ஆற்றங்கரையிலே தகுதியான இடத்திலே இரண்டு குடில்களை அமைத்துவிட்டுப் போனான்.

99

துகூலகன் இந்த இடத்திற்கு வந்து குடிசைகளைக் கண்டு “இந்திரன் அமைத்துக் கொடுத்த குடில்கள் இவை” என்று சொல்லி அதனுள் சென்று தனது ஆடைகளைக் களைந்து மரவுரி அணிந்து துறவியானார். பாரிகைக்கும் துறவு கொடுத்தார். இருவரும் இந்தக் குடிசைகளில் தங்கித் துறவியாக இருந்தார்கள். கணவன் மனைவி என்கிற தொடர்பு இல்லாமல் தூய துறவற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.