பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

31

காட்டில் வாழும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் நட்பும் உள்ளவர்களாக இருந்தபடியினாலே, விலங்குகளும் பறவைகளும் இவர்களிடத்தில் நட்பும் நேசமுமாக இருந்தன. பாரிகையம்மை, ஆற்றிருந்து நீர் கொண்டு வருவாள். ஆசிரமத்தை அலகினால் துப்புரவு செய்து தூய்மைப் படுத்துவாள்.இருவரும் காட்டுக்குச் சென்று கிழங்குகளையும் பழங்களையும் பறித்துக்கொண்டு வந்து உண்பார்கள். பிறகு, இருவரும் தத்தமக்குரிய குடிசையில் சென்று துறவு முறைப் படித் தவம் செய்வார்கள். இவ்வாறு நாட்கள் பல கடந்தன.

ஒருநாள் சக்கன் இவர்களுக்கு நேரிடப்போகிற துன்பத்தை அறிந்தான். இவர்களுக்குக் கண்பார்வை மறைந்து துன்புறப் போகிறார்கள் என்பதை உணர்ந்தான். ஆகவே, சக்கன் விண்ணுலகத் திலிருந்து வந்து துகூலக முனிவரிடம் சென்று வணங்கி ஒருபுறமாக அமர்ந்து இவ்வாறு கூறினான்: 'முனிவரே! எதிர் காலத்தில் ஒரு துன்பம் நேரப் போகிறது. அக்காலத்தில் உமக்கு உதவிசெய்ய ஒருமகனைப் பெற்றுக் கொள்ளும். இல்லற வழியில் நடந்துகொள்ளும்” என்று கூறினான்.

"தேவர்களுக்கு அரசரே! ஏன் இவ்வாறு கூறுகிறீர். நான் வீட்டில் இருந்தபோதும் சிற்றின்பத்தை வெறுத்தவனாயிற்றே. இப்போது காட்டில் வந்து துறவியாக இருக்கும்போது சிற்றின்பத்தை நாடுவேனா?” என்று விடை கூறினார் முனிவர்.

66

'நல்லது. அப்படியானால், ஒரு நல்ல நேரத்தில் பாரிகை யம்மையின் கொப்பூழைத் தங்கள் கையினால் தொட்டால் போதும் என்றார் சக்கன். அப்படிச் செய்ய முனிவர் ஒப்புக் கொண்டார். சக்கன் வணங்கி விடைபெற்றுப் போய்விட்டான்.

-

முனிவர் இந்தச் செய்தியைப் பாரிகைக்குத் தெரிவித்தார். பிறகு ஒருநாள் நல்ல நேரத்திலே பாரிகையின் கொப்பூழை முனிவர் தமது கையினால் தொட்டார். அப்போது துடித லோகத்தி ருக்கும் போதி சத்துவர் இறங்கி வந்து பாரிகையம்மையின் வயிற்றிலே கருவாக அமர்ந்தார். பத்துத் திங்கள் சென்றபிறகு அவருக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. காட்டிலே மலைமேல் வாழும் கின்னர மகளிர் வந்து பாரிகைக்கு மருத்துவம் செய்தார்கள். குழந்தைக்குச் சாமன் என்று பெயரிட்டார்கள். குழந்தை பொன்னிறமாக இருந்தபடியால் சுவர்ணசாமன் - அதாவது பொன்னன் சாமன், என்று அழைத்தார்கள்.