பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

33

விடுவார்களே! இன்று ஏன் இவ்வளவு நேரமாகியும் வரவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ? போய்ப் பார்ப்போம்” என்று நினைத்து, வெளியேறி வந்து தமது பெற்றோரைத் தேடிப்பார்க்கத் தொடங்கினார். தேடிச் சென்றவர் உரத்த குரல் அவர்களைக் கூவி அழைத்தார். மகனுடைய குரலைக் கேட்டு அவர்களும் பதிலுக்குக் குரல்கொடுத்தார்கள். சாமன் அவர் களிடம் ஓடினார். "நெருங்கி வராதே. இங்கு ஆபத்து இருக்கிறது” என்று அவர்கள் கூவினார்கள். சாமன், நீளமான மூங்கில் ஒன்றை எடுத்து அவர்கள் பக்கமாக நீட்டினான். அவர்கள் மூங்கிலைப் பிடித்துக்கொண்டே இவனருகில் வந்தார்கள். பெற்றோர் பார்வையற்றிருப்பதைக் கண்டு சாமன், அதன் காரணத்தை வினவினான். “மழைக்காக மரத்தடியில் ஒதுங்கினோம். அங்கே பாம்புப்புற்று இருந்தது. பாம்பு எங்களைக் குருடாக்கிற்று” என்று அவர்கள் சொன்னார்கள். "புற்றில் பாம்பு கோபம் கொண்டு சீறி மூச்சுவிட்டிருக்கும். நச்சுக்காற்றினால் பார்வை மறைந்தது என்று கூறினான் சாமன். இவ்வாறு கூறிய சாமன் அழுதான்; பிறகு சிரித்தான். “ஏன் அழுகிறாய், பிறகு சிரிக்கிறாய்?” என்று அவனைக் கேட்டார்கள். 'நீங்கள் கண் இழந்த துன்பத்திற்காக அழுதேன். உங்களுக்குத் தொண்டு செய்து, ஊழியம் புரிய வாய்ப்பு ஏற்பட்டதற்காகச் சிரித்தேன்” என்று விளக்கம் கூறினான் சாமன். “இனி உங்களுக்கு வேண்டிய வற்றை நான் செய்வேன். நீங்கள் குடிலில் தங்கியிருங்கள் நான் போய்க் காய்கனிகளைக் கொண்டு வருவேன்" என்று சொல்லி அவர்களைக் குடிலுக்கு அழைத்துச் சென்றான்.

66

அன்றுமுதல் சாமன் தனது பெற்றோருக்குப் பணி விடைகள் செய்துவந்தான். காட்டுக்குச் சென்று காய்கனி கிழங்குகளைக் கொண்டு வருவான். காலையில் ஆசிரமத்தை அலகிட்டுத் துப்புரவு செய்வான். ஆற்றுக்குப் போய்க் குடத்திலே நீர் கொண்டு வந்து அவர்களுக்குக் கைகால் முகம் கழுவக் கொடுப்பான். குடிப்பதற்கு நீர்கொண்டு வருவான். அவர்கள் நடப்பதற்கு உதவியாகக் கயிறுகளை அங்கங்கே கட்டிவைத்தான். அக் கயிறுகளைப் பிடித்துக்கொண்டே அவர்கள் அங்கும் இங்கும் நடப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பணி விடைகளைச் செய்த பிறகு, அவர்களை வணங்கி விடைபெற்றுக் கொண்டு காய்கனி கிழங்குகளைக் கொண்டுவருவதற்குக் காட்டுக்குப் போவான். அங்கிருந்த மான்கள், இவன் போகும் இடங்களுக்கெல்லாம் இவனுடன் சேர்ந்து போயின. மலைமேலே வாழும் கின்னரர்களுடன்