பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

35

இவ்வாறு அரசன் தனக்குள் எண்ணிக் கொண்டிருந்த போது, மான் கூட்டம் வந்து ஆற்றில் சென்று நீரைக் குடித்தன. அவை நீரைக் குடித்துத் திரும்பிய பிறகு, சாமன் ஆற்றில் இறங்கிக் குடத்தில் நீரை முகந்து தோளின்மேல் வைத்துக் கொண்டு திரும்பினான். அப்போது, மறைந்திருந்த அரசன் நஞ்சு ஊட்டிய அம்பை அவன் மார்பிலே குறிவைத்து எய்தான். அம்பு மார்பில் தைத்தது. சாமன் புண்பட்டதைக் கண்ட மான்கள் அச்சங்கொண்டு ஓடின. சாமனுக்குத் தளர்ச்சி உண்டாயிற்று. அவன் நீர்க்குடத்தைக் கரைமேல் வைத்துவிட்டு, ஆற்று மணலைக் குவித்து அதன்மேல் தலையை வைத்துப் படுத்துத் தன் பெற்றோர் இருக்கும் திசையில் கையை நீட்டினான். மாலை வெயில், வெண் மணற் பரப்பிலே பொன் நிறச் சாமன் படுத்துக்கிடப்பது, வெள்ளித் தரையில் பொற்பதுமை கிடப்பது போலத் தோன்றிற்று. சோர்வடைந்த சாமன் தனக்குள் கூறிக் கொண்டான்: 'இந்த இமயமலைக் காட்டிலே எனக்குப் பகை யானவர் ஒருவரும் இலர். நானும் யாரிடத்திலும் பகைமை உடையவன் அல்லன்.' அதற்குள்ளாக அரசன் அவ்விடம் வந்தான். சாமனுடைய மார்பிலும் வாயிலும் இரத்தம் வழிந்தது.

“நான் நீரை முகந்தபோது மறைந்திருந்து அம்பு எய்தவர் நீர்தானோ? என்னுடைய இறைச்சி தின்பதற்கு உதவாது. என்னுடைய தோலும் எதற்கும் பயன்படாது. என்னைக் கொன்று நீர் அடையக்கூடிய ஊதியம் என்ன? என்னைக் கொன்ற நீர் யார்? உமது பெயர் என்ன?” என்று சாமன் கேட்டான்.

என்

இதைக்கேட்ட அரசன் தனக்குள் எண்ணினான்: அம்பினால் இவன் அடிபட்டு விழுந்தும் இவன் என்னை நிந்திக்க வில்லை. கோபித்துச் சபிக்கவில்லை. சினமும் பகையும் இல்லாமல் இவன் பேசுகிறான். அருகில் செல்லுவோம்' என்று நினைத்து அருகில் சென்று இவ்வாறு கூறினான்: “நான் வாரணாசி நாட்டின் அரசன், என்னைப் பியக்கன் என்று அழைப்பார்கள். வில்வித்தையில் வல்லவன். மான் வேட்டையாட இக்காட்டிற்கு வந்தேன். என் அம்புக்கு நாகர்களும் தப்பிக்கொள்ள முடியாது. அதிருக்கட்டும், நீர் யார்? யாருடைய மகன்? உமது பெயர் என்ன? எந்தக் குடும்பத்தில் பிறந்தவர்? உமது தந்தையின் பெயர் என்ன?

சாமன் விடை கூறினான்: “என்னைச் சாமன் என்று அழைப்பார் கள். நான் வேடர் குலத்தில் பிறந்தவன். மறைந்து இருந்து என்னை