பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

அம்பு எய்தீர். அம்புபட்ட மான்போல நான் இதோ மணலில் விழுந்து கிடக்கிறேன். நஞ்சு தோய்ந்த அம்புப்பட்ட புண்ணிருந்து இரத்தம் வழிந்தோட செயலற்றுக் கிடக்கிறேன். இளைப்பும் களைப்பும் ஓய்ச்சலும் எனக்கு வந்துவிட்டன. சாகும்தறுவாயில் உம்மைக் கேட்கிறேன். ஏன் மறைந்திருந்து என்னைக் கொல்ல நினைத்தீர்? என் உடம்பின் மாமிசம் உணவுக்கு உதவாது. என் உடம்பின் தோல் எதற்கும் பயன்படாது. என்னைக் கொல்வதினாலே உமக்கு உண்டாகும் நன்மை என்னை? அரசன் உண்மையை மறைத்துப் பொய்யாக விடை கூறினான்: “உன்மேல் எனக்குப் பகை இல்லை. ஒரு மான் என் கண்ணில் பட்டது. அதன்மேல் அம்பு எய்த நினைத்தேன். அதற்குள் நீ இங்கு வந்தாய். உன்னைக்கண்ட மான் பயந்து ஓடிற்று. அதன்மேல் எய்த அம்பு உன் மார்பில் பட்டுவிட்டது.

وو

சாமன்: “நான் சின்னஞ்சிறுவனாக இருந்ததுமுதல் இது வரையில் எந்த மிருகமும் என்னைக்கண்டு ஓடியது இல்லை. ஏன்? கொடிய விலங்குகளும் என்னுடன் நட்பாக இருக்கின்றன. அப்படியிருக்க மானா என்னைக்கண்டு பயந்து ஓடிற்று?”

குற்றமற்ற இவனைப் புண்படுத்திவிட்டதோடு பொய்யையும் பேசிவிட்டேன் என்று அரசன் தனக்குள் எண்ணி இனி உண்மையைப் பேசவேண்டும் என்று கருதி இவ்வாறு கூறினான்: “சாம! மான்மேல் அம்பு எய்தேன் இல்லை. கோபமும் வெறுப்பும் கொண்டு உன்மேல் அம்பு எய்தேன்” என்று சொல், இவன் தன்னந்தனியே இக்காட்டில் இருக்க மாட்டான். இவனைச் சேர்ந்தவர்களும் இங்கு இருப்பார்கள்; அவர்களைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று நினைத்து, "நண்பா! நீ எங்கிருந்து வந்தாய்? உன்னை நீர் கொண்டு வரும்படி அனுப்பியவர் கள் யார்?” என்று வினாவினான்.

சாமனுக்கு உடம்பில் மிகுந்த வலி உண்டாயிற்று. காயத்திலிருந்து இரத்தம் வடிந்ததோடு வாயிலிருந்தும் இரத்தம் வழிந்தது. சாகும்

தறுவாயிலிருந்தான்.

66

'என்னைப் பெற்றோர், அதோ அங்கே இருக்கிறார்கள். பார்வை இழந்து என் ஆதரவிலே இருப்பவர்கள். அவர்களுக்குத் தான் நான் தண்ணீர் கொண்டுபோக வந்தேன்" என்று கூறி சாமன் அவர்களுடைய பரிதாபமான நிலைமையை எண்ணிக் கவலைகொண்டு அழுது அரற்றினான். "அவர்கள் வாழ்க்கை அணைந்துபோகும் தறுவா