பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

37

யிலிருக்கிற விளக்குப் போன்றது. அங்குள்ள காய் கிழங்குகள் ஒரு வாரத்திற்கும் காணாது! தண்ணீர் இல்லாமல், அந்தோ! அவர்கள் என்ன செய்வார்கள்! கண்ணற்ற அவர்கள் தாகத்தினால் நா வறண்டு, அந்தோ! இறந்து போவார்கள். நான் சாவதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. என்றைக்காவது ஒரு நாளைக்குச் சாகவேண்டியவன்தானே! சாவதற்கு முன்பு அவர்கள் முகத்தைப் பார்க்கவும் முடியவில்லையே! என் தாயார் ஓ என் அம்மா! என்னை நினைத்து நினைத்து வருந்தித் துன்பம் அடைவார். இரவும் பகலும் கண்ணீர் உகுத்து ஏங்கி அழுது கவலைப் படுவார். என் தந்தை ஓ என் அப்பா! நினைத்து நினைத்துத் துக்கப் பட்டுத் துன்பம் அடைந்து வருந்துவார். இரவும் பகலும் கவலைப் பட்டுக் கண்ணீர் விடுவார். இவ்வளவு நேரம் ஆகியும் நான் போகாததற் காகக் கவலையோடு எதிர்பார்த்திருப்பார்கள். கண்ணற்ற அவர்கள் காட்டிலே அலைந்து அலைந்து என்னைத் தேடுவார்கள். இதை நினைக்கும்போது இன்னொரு அம்பு என் நெஞ்சைத் துளைப்பது போல இருக்கிறதே! இங்கே மண்ணில் கிடந்து செத்துக்கொண்டிருக்கிற நான், அந்தோ! அவர்கள் முகத்தைக் கடைசியாகப் பார்க்கவும் முடியாதவனாய் இருக்கிறேனே!” இவ்வாறு சாமன் அரற்றி அழுதான்.

இதைக் கேட்ட அரசன் மனம் உரு மனம் உருகினான். கண்ணற்ற பெற்றோரைக் காப்பாற்றும் இவன், அவர்களின் பரிதாப நிலை மைக்காக வருந்துகிறான். சாகும் தறுவாயிலுள்ள இவன், தன் நோயை மறந்து அவர்களுக்காக ஏங்குகிறான். இவ்வளவு நல்லவனுக்குப் பெருந்தீங்கு செய்துவிட்டேன். எவ்வாறு இவனுக்கு ஆறுதல் கூறுவேன்? அரசனாக இருந்தும் நரகத்தைத் தேடிக் கொண்டேன்! இவன், தன் பெற்றோரைக் காப்பாற்றியது போல, அவர்களைப் போற்றிக் காப்பாற்றுவதுதான், நான் இவனைக் கொன்ற பாவத்திற்குச் செய்யத்தகுந்த கழுவாய் ஆகும் என்று தனக்குள் எண்ணிக்கொண்டு, சாகுந்தறுவாயிலிருக்கும் சாமனைப் பார்த்துக் கூறுகிறான்: “சாம! துன்புறாதே. கவலைப்படாதே. உன்னுடைய பெற்றோருக்கு வேண்டிய பணிவிடைகளையும் உதவிகளையும் நான் செய்வேன். உனக்குப் பதிலாக அவர்களைப் பராமரித்துக் காப்பாற்றுவேன். என் சொல்லை உறுதியாக நம்பு. காய்கனிகளைக் கொண்டு வந்து கொடுத்து அவர் களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்வேன், சாம! அவர்கள் இருக்கும் இடத்தைச் சொல்லு. அங்குச்சென்று அவர்களுக்கு வேண்டியவற்றை நான் செய்கிறேன்."