பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

39

கொடுத்து நீர்வேட்கை தீர்ப்பான். நானும், சாமன் உடம்பில் ஏறியுள்ள நஞ்சை நீக்கி அவனைப் பிழைக்கச் செய்வேன். பிறகு, அவ னுடைய பெற்றோரின் கண்படலத்தை நீக்கி அவர்களுக்குப் பார்வையை யுண்டாக்குவேன். அரசனையும் தருமவானாக்குவேன்' என்று எண்ணினாள்.

66

ஆகவே அந்தத் தெய்வமகள் ஆற்றங்கரைக்கு வந்து அரசன் கண்ணுக்குத் தெரியாமல் அருவமாக இருந்து இவ்வாறு கூறினாள்: அரசனே! நீ கொடிய தவறு செய்தாய். பெரிய பாவம் உன்னைச் சார்ந்திருக்கிறது. இந்த இளைஞனும் இவனுடைய பெற்றோரும் ஒரு குற்றமும் செய்யாதவர்கள். உன்னுடைய அம்பு இந்த மூன்று பேரையும் கொன்றுவிட்டது. ஆனாலும் உனக்கு ஓர் கழுவாய் உண்டு. நீ போய் குருடராக உள்ள இவனுடைய பெற்றோருக்கு உதவி செய்க. அப்படிச் செய்வது உனது பாவத்தைக் கழுவும் கழுவாயாகும்.'

وو

ஆகாயத்திருந்து வந்த இந்தப் பேச்சைக்கேட்ட அரசன், அதனை வாய்மை என உணர்ந்தான். சாமனுடைய குருட்டுப் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டுவது தனது கடமை என்றும், தன்னுடைய நற்கதிக்கு வழி என்றும் கருதினான். இராச்சியமும் அரசாட்சியும் இருந்து என்ன செய்யும்? நான் செய்த பாவத்தைப் போக்க ஆசிரமம் சென்று அவர்களுக்குப் பணிவிடை செய்வதே தக்கதென்று உறுதி கொண்டான். பிறகு, அவன் பூக்களைப் பறித்துவந்து சாமனுடைய உடம்பில் வைத்து நீர் தெளித்து மும்முறை வலமாக வந்து நான்கு திசைகளையும் தொழுதான். பின்னர், நீர்க்குடத்தை எடுத்துக்கொண்டு, இளைஞன் இறந்த தற்காக வருந்திகொண்டே ஆசிரமத்தை நோக்கி நடந்தான்.

ஆசிரமத்தின் வாயிற்படியில் உட்கார்ந்து சாமன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துகூலக முனிவர் தன் மகன்தான் வருகிறான் என்று நினைத்தார். ஆனால், காலடி ஓசை வேறுவித மாக இருப்பதையறிந்து, இவ்வாறு கூறினார். இது சாமனுடைய காலடி ஓசையல்ல. வேறு காலடி ஓசையாக இருக்கிறது. புதியவர் யாரோ வருகிறார். யார் ஐயா தாங்கள்?

66

இதைக்கேட்ட அரசன் தனக்குள் எண்ணினான்: “நான் அரசன் என்பதைச் சொல்லாமல் இவருடைய மகனைக் கொன்றவன் என்பதை மட்டும் சொன்னேனானால், இவர் சினம்கொண்டு என்னை வைதுசபிப்பார். அப்போது எனக்குச் சினம் உண்டாகும். அதனால், இவருக்கும் ஏதேனும் துன்பத்தைச் செய்ய நேரிடும். அதனால் மேலும்