பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

பாவத்தைத் தேடிக்கொண்டவன் ஆவேன். அரசனுக்கு அஞ்சாதவர் ஒருவரும் இலர். ஆகையால், முதலில் நான் அரசன் என்பதைத் தெரிவிக்கவேண்டும்” என்று நினைத் தான் பிறகு நீர்க்குடத்தை அதன் இடத்தில் வைத்துவிட்டு, வாயிலண்டை நின்றுகொண்டு இவ்வாறு சொன்னான்:

“நான் வாரணாசி நாட்டு மன்னன். என்னைப் பிலியக்கன் என்று கூறுவார்கள். நாட்டைவிட்டு மான் வேட்டைக்காகக் காட்டுக்கு வந்தேன். வில்வித்தையில் என்னை ஒப்பவர் ஒருவரும் இலர். நான் எய்யும் அம்புக்குத்தப்பிப் பிழைப்பவர் ஒருவருமிலர். நாககுமரரும் என் அம்புக்குத் தப்பிப் பிழைக்கமுடியாது.'

அதைக்கேட்ட முனிவர் மகிழ்ந்து கூறினார்: “வருக வருக! வாரணாசி மன்னரே! தங்கள் வரவு நல்வரவாகுக. தங்கள் புகழையும், வீரத்தையும் உலகம் புகழ்கிறது. தங்கள் வருகைக்கு நாங்கள் மனம் மகிழ்கிறோம். இனிய கிழங்கும் சுவையுள்ள பழங்களும் குளிர்ந்த நீரும் இங்கு உள்ளன. தங்களுக்கு விருப்பமானால், அவற்றை

உண்டருளுங்கள்.

وو

தன்னை வரவேற்கிற முனிவரிடம், தான் சாமனைக் கொன்ற செய்தியைத் திடீரென்று கூறுவது சரியல்ல; முதல் வேறு செய்திகளைப் பற்றிப் பேசிய பின்னர் சொல்லுவதுதான் முறை என்று அரசன் தனக்குள் எண்ணினான். “பார்வையற்றவராகிய தாங்கள் இந்தப் பழங்களைக் காட்டிருந்து பறித்து வந்திருக்க முடியாது. நானாவிதமான இந்த நல்ல பழங்களைப் பறித்து வந்தவர் நல்ல கூர்மையான பார்வையுடையவராக இருக்கவேண்டும்" என்று பேசினான் அரசன்.

பெரியவர், தன் மகன் சாமன் பறித்து வந்ததைத் தெரி வித்தார். “எங்கள் மகன் சாமன் ஆண்டில் இளையவன். இன்னும் நன்றாக வளராதவன். கண்ணுக்கு இனியன் அழகன். அவனுடைய நீண்ட கருமையான மயிர் சுருண்டு சுருண்டு தொங்கிக் கொண்டிருக்கும். அவன்தான் இப்பழங்களைப் பறித்துக்கொண்டு வந்தான். நீர்கொண்டு வர ஆற்றுக்குப் போயிருக்கிறான்.இப்போது வந்து விடுவான்” என்று கூறினார்.