பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

47

இளவரசன் என்பதைத் தெரிந்து இவனைப்போற்றி ஆதரித்தனர். அரிட்ட ஜனகன் இவனை மீண்டும் சிறைப்பிடிக்க முடியவில்லை.

சிலகாலம் சென்றபிறகு, எல்லைப்புறப் பகுதிக்குப் பொல ஜனகன் அரசனானான். பெருஞ்சேனையைச் சேர்த்துக்கொண்டான். ‘முன்பு நான் என் அண்ணனிடம் பகைமை பாராட்டவில்லை; ஆனால், இப்போது பகைமை பாராட்டுகிறேன்' என்று தனக்குள் கூறிக்கொண்டான் அவன் சேனை யுடன் புறப்பட்டு மிதிலாபுரியின்மேல் படையெடுத்துச் சென்றான். சென்று நகரத்திற்கு வெளியே பாசறை அமைத்துத் தங்கினான். பொல ஜனக னுடன் நகரத்து மக்கள் பலர் வந்து சேர்ந்துகொண்டனர். சுற்றுப்புறத்து ஊர்களில் இருந்தவர்களும் இவனை ஆதரித்தார்கள். பொல ஜனகன், அரிட்ட ஜனகனிடம் தூது அனுப்பி, "முன்பு நான் தங்களுக்குப் பகைவனாக இருந்த தில்லை. ஆனால், இப்போது நான் தங்களுக்குப் பகைவன். கொற்றக்குடையை என்னிடம் கொடுங்கள்; அல்லது என்னுடன் போர்செய்ய வாருங்கள்” என்று செய்தி தெரிவித்தான்.

6

தூதர்கள் சொன்ன செய்தியைக்கேட்ட அரிட்ட ஜனகன் போர் செய்ய உடன்பட்டான். போர்க்களம் போவதற்கு முன்னே, வயிறு வாய்த்துப் பிள்ளைத்தாய்ச்சியாக இருந்த அரசியிடம் சென்றான்: “நான் போர்க்களம் செல்கிறேன். போரிலே வெற்றி கிடைக்குமா, தோல்வி கிடைக்குமா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. போரிலே நான் இறந்து விடுவேனானால், உனக்குப் பிறக்கபோகிற இந்தக் குழந்தையைக் கவலையுடன் நன்கு பாதுகாத்துக்கொள்” என்று கூறிஅரசியினிடம் விடை பெற்றுத் தன் சேனையுடன் புறப்பட்டுப் போர்க்களம் சென்றான். போரிலே அரசனான அரிட்ட ஜனகன் உயிர் நீத்தான். அரசன் இறந்த செய்தியை அறிந்த நகர மக்கள் குழப்பம் அடைந்தனர். நகரத்தில் கூச்சலும் குழப்பமும் சந்தடியுமாக இருந்தன.

அரசன் இறந்த செய்தியை அறிந்த இராணி, பொன் நகை களையும் நவரத்தினங்களையும் விலையுயர்ந்த பொருள்களையும் எடுத்துக் கூடையில் வைத்து அதன்மேல் துணியினால் மூடி, அதன் மேல் அரிசியைப் பரப்பி, ஏழைக் குடியானவப் பெண்ணைப்போல ஆடை உடுத்திக்கொண்டு, கூடையைத் தலையின் மேல் வைத்துக் கொண்டு யாரும் அறியாமல் புறப்பட்டு அரண்மனையைவிட்டுச் சென்றாள். அரண்மனைக்கு அப்பால் கோட்டையின் வடக்குவாயில் வழியாகச் சென்ற இராணி, மேலே செல்ல வழியறியாமலும், என்ன