பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

செய்வதென்று தெரியாமலும் திகைப்படைந்தாள். அங்கு ஓரிடத்தில் உட்கார்ந்து சிந்தித்துக் கடைசியில் காளசண்பை என்னும் ஊருக்குப் போக உறுதி செய்துகொண்டாள். பிறகு, காளசண்பைக்குப் போகிறவர் யாரேனும் உளரா என்று அங்குள்ளவரைக் கேட்டாள்.

கரு

அரசியார் வயிறு வாய்த்திருந்தார் அல்லவா? அவர் வயிற்றிருந்த சாதாரண குழந்தையன்று. பாரமிதைகளைக் குறைவறச் செய்திருந்த போதிசத்துவரே, அவர் வயிற்றில் கருவாக அமர்ந்திருந்தார். அப்போது, தேவலோகத்திலே சக்கனுடைய சிம்மாசனம் சூடு கொண்டது. அதன் காரணத்தைச் சிந்தித்துப் பார்த்த சக்கன், அரசியின் வயிற்றிலே போதிசத்துவர் கருவாகி இருப்பதை அறிந்தார். போதி சத்துவருக்குத் தீங்கு நேராமல் காப் பாற்ற வேண்டுவது சக்கனுடைய கடமையாகையினாலே, சக்கன் அரசிக்கு உதவிசெய்ய வந்தான். சக்கன், வயது முதிர்ந்த கிழவனைப்போல உருமாற்றிக்கொண்டு மூடு வண்டி ஒன்றை ஓட்டிக்கொண்டு அரசியார் அமர்ந்திருந்த வீட்டுக்கு எதிரில் வந்து வண்டியை நிறுத்தினான். நிறுத்தி, காளசண்பைக்குப் போகிறவர் யாரேனும் இருக்கிறார்களா?" என்று கேட்டான்.

மாறுவேடம் பூண்ட அரசியார், “நான் போகிறேன், தாத்தா” என்று கூறினார்.

"அப்படியானால் வண்டியில் ஏறுங்கள், அம்மா!" என்றான்

கிழவன்.

66

"தாத்தா, இந்தக் கூடையை மட்டும் வண்டியில் வைத்துக் கொள்ளுங்கள். நான் நடந்து வருகிறேன். ஏனென்றால், வண்டி போகும் போது இப்புறமும் அப்புறமும் அசைந்து ஆடும். அதிர்ச்சியினால் எனக்கு உடம்பு கெடும்" என்று கூறினார்.

66

'அம்மா! அதற்காகக் கவலைப்படாதீர்கள். வண்டி அதிராதபடி ஓட்டுவேன். வண்டியில் படுக்கை இருக்கிறது. அதை விரித்துப் போட்டுப் படுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சமும் அதிர்ச்சி இருக்காது என்று சொல்லி, படுக்கையை விரித்துப்போட்டான். அரசியார் வண்டியில் ஏறிப் படுக்கையில் படுத்துக்கொண்டார். வண்டி சென்றது. தெய் வந்தான் தனக்குத் துணை செய்கிறது என்று நினைத்துக் கொண்டே அரசியார் தூங்கிவிட்டார். முப்பது யோசனை தூரம் சென்றபிறகு வண்டி ஒரு ஆற்றங்கரையண்டை வந்து நின்றது. சக்கன்,