பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

49

அரசியாரை எழுப்பி, "இறங்கிப்போய் ஆற்றில் நீராடுங்கள் அம்மா. உடுத்திக் கொள்ள வண்டியில் நல்ல துணி இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு போங்கள். நீராடிய பிறகு உண்பதற்கு வண்டியில் பணிகாரம் இருக்கிறது” என்று கூறினான்.

அவன் கூறியபடியே அரசியார் ஆற்றில் நீராடிப் பணி காரத்தை அருந்தியபின் மீண்டும் வண்டியில் படுத்துக் கொண் டார். வண்டி புறப்பட்டுச் சென்றது. மாலை நேரமானதும் வண்டி காளசண்பை நகரத்தையடைந்தது. அரசியார், “இது என்ன ஊர்?” என்று கேட்டார்.

“காளசண்பை நகரம்” “என்ன? அறுபது யோசனை தூரத்தைக் கடந்து இவ்வளவு விரைவாக வந்துவிட்டாயா?” “ஆமாம், அம்மா! நான் குறுக்குவழியாக வந்தேன். இதுதான் தெற்கு வாயில். இங்கே இறங்கி நகரத்துக்குப் போங்கள். நான் இந்த வழியாகக் கொஞ்சதூரம் போக வேண்டும்” என்று சொல்லி, அரசியாரை இறக்கிவிட்டுப் போய்விட்டான்.

அரசியார் கோட்டை வாயிலில் நுழைந்து நகரத்தில் சென்று அங்கு ஒரு மண்டபத்திலே தங்கினார். அவ்வமயம் அந்நகரத்தில் வசிக்கும் ஒரு பிராமணன், தனது சீடர்களுடன் ஆற்றில் நீராடுவதற்காக அவ்வழியே வந்தவன் அரசியார் இருப்பதைக்கண்டு, உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறிந்தான். கரு வாய்த்திருக்கும் அவ்வம்மை யாருக்கு உதவிசெய்யவேண்டும் என்னும் எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. அவன் சீடர்களைத் தெருவில் நிறுத்திவிட்டு, மண்டபத் தில் சென்று, “தங்காய்! தாங்கள் எங்கே இருப்பவர்?" என்று கேட்டான். “நான் மிதிலை நாட்டு அரிட்ட ஜனக ராஜனின் பட்டத்து அரசி” என்று விடைகொடுத்தார். “ஏன் இங்கு வந்தீர்கள்?” “அரசன் போரில் கொல்லப்பட்டார். நாட்டைப் பொல

ஜனகன்

பிடித்துக்கொண்டான். அங்கிருந்தால் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து நேரிடும் என்று அஞ்சி இங்கு வந்தேன்.” “தாங்கள் உறவினர் யாரேனும் இந்நகரத்தில் இருக்கிறார்களா?" "ஒருவரும் இல்லை, அண்ணா!

“கவலைப்படாதீர்கள். நான் இந்நகரத்திலே நல்ல குடும்பத்தில் பிறந்த பிராமணன். தங்களை என் தங்கைபோல நான் கவனித்துக் கொள்வேன். தாங்கள் என்னை உங்கள் சொந்த அண்ணனைப்போல நினைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, என் காலைக் கட்டிக் கொண்டு அழுது கூவுங்கள் என்றான்.