பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

அவளும் அவன் காலைப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டு அழுதாள். பிராமணனும் அழுது புலம்பினான். இதைக்கண்ட, தெருவில் நின்று கொண்டிருந்த இவனுடைய சீடர்கள், ஓடிவந்து என்ன என்று கேட்டார்கள், " இவள் என்னுடைய தங்கை. நெடுநாளாக இவளைக் காணவில்லை. இப்போது தற்செயலாக இங்கு கண்டேன்" என்று கூறி அழுதான் பிராமணன். “ஐயா, ஏன் வருந்துகிறீர்கள்? அவர்கள்தான் இப்போது வந்துவிட்டார்களே! அழவேண்டாம்' என்று சொல்லி சீடர்கள் அவரைத் தேற்றினார்கள். பிராமணன் ஒரு மூடுவண்டியைக் கொண்டு வரச் சொல், அதில் அரசியாரை ஏற்றித் தன் வீட்டுக்கு அனுப்பி, அவள் தனது தங்கை என்றும், அவளுக்கு வேண்டியதை யெல்லாம் செய்யும் படியும் தனது மனைவியிடம் சொல்லும்படி ஒரு ஆளை அனுப்பி னான். அவன் மனைவி, அவரை வரவேற்று வெந்நீரில் நீராட்டி, பிறகு படுக்கையை விரித்து அதில் படுக்க வைத்தார். ஆற்றுக்குச் சென்று பிராமணன் நீராடிய பிறகு வீட்டுக்கு வந்தான். உணவு கொள்ளும்போது தனது தங்கையையும் தன்னுடன் உட்காரவைத்து உணவு கொண்டான்.

தகுந்தகாலத்தில் அரசியார் ஒரு ஆண் மகவைப் பெற்றார். அக் குழந்தைக்கு மகா ஜனகன் என்று பாட்டன் பெயரையே சூட்டினார். குழந்தை வளர்ந்து, சிறு பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடினான். சிறுவர்கள் மகா ஜனகனுக்குக் கோப மூட்டி னால், துணிச்சலும் வலிவும் உள்ள இவன் அவர்களை நன்றாக அடித்துவிடுவான். அப்போது அவர்கள் கூச்சலிட்டு அழுவார் கள். யார் அடித்தது என்று யாரேனும் கேட்டால், அவர்கள் “ அந்தக் கம்மினாட்டி மகன் அடித்தான்” என்று கூறுவார்கள். அவ்வாறு கூறுவதைக்கேட்ட மகா ஜனகன், 'இவர்கள் எப்போதும் என்னைக் கைம்பெண் மகன் என்று கூறுகிறார்கள். இதைப்பற்றி அம்மாவைக் கேட்கவேண்டும்' என்று எண்ணினான்.

அவன் தன் தாயிடம் சென்று, “அம்மா! நான் யாருடைய மகன்?" என்று கேட்டான். தாயார், தன் மகனுக்கு விடை சொல் லாமல் தட்டிக் கழித்தாள். ஆனால், சிறுவன் விடவில்லை, வற் புறுத்திக் கேட்டான். அப்போது அவள் உண்மையைக் கூறினாள்: “கண்ணே! நீ அரிட்ட ஜனகன் என்னும் அரசனுடைய மகன். உன் தந்தையை உன் சிற்றப்ப னாகிய பொல ஜனகன் போரில் கொன்று விட்டார். உனக்கு ஆபத்து வராமல் காப்பாற்ற நான் இந்த நகரத்துக்கு வந்தேன். இந்தப் பிராமணன் என்னைத் தன் தங்கைபோல ஆதரித்து வருகிறார்" என்று கூறினாள். அதுமுதல், சிறுவர்கள் இவனைக் ‘கைம்பெண் மகன்' என்று கூறிய