பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

51

போது இவன் சினங் கொள்ளவில்லை. பதினாறு வயது ஆகும் முன்பே இவன் கல்வியைக் கற்றுத் தேர்ந்தான். பதினாறு வயது ஆனபோது அழகான வாலிபனாக விளங்கினான்.

அப்போது மகாஜனகன், தன் தந்தையின் நாட்டைத் தான் பெற வேண்டும் என்று எண்ணினான். அன்னையினிடம் சென்று “தங்கள் கையில் செல்வம் இருக்கிறதா? இல்லையானால், நான் வாணிகம் செய்து பொருள் ஈட்டுவேன்" என்று கூறினான். “மகனே! நான் வெறுங் கையோடு வரவில்லை. முத்துக்களும் மாணிக்கங்களும் நகைகளும் நவரத்தினங்களும் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றைக்கொண்டு நீ அரசாட்சியைப்பெற முடியும். நீ உன் அரசாட்சியைப் பெறுவதற்கு முயற்சி செய்க. நீ வாணிகம் செய்து பொருள்தேட வேண்டியதில்லை என்று தாயார் கூறினாள்.

அவன் தன் தாயிடமிருந்து செல்வத்தில் ஒரு பகுதிப் பொருளைக் கொண்டு பலவிதமான சரக்குகளை வாங்கி அவற்றைக் கப்பலில் ஏற்றினான். தாயினிடம், தான் சுவர்ணபூமிக்கு (பர்மாதேசம்) சென்று வாணிகம் செய்யப்போவதாகக் கூறினான். “அப்பா! நீ ஏன் கடல் கடந்து போய் வாணிகம் செய்ய நினைக் கிறாய்? நீ அரசாட்சியைப் பெறுவதற்கு முயற்சி செய். நம்மிடம் போதுமான செல்வம் இருக்கிறது. கடல் சென்றால் ஊதியத்தைவிட ஆபத்து அதிகம் உண்டு” என்று சொல்லித் தடுத்தாள். குமாரன் தாய்சொல்லைக் கேளாமல், பிடிவாதமாக இருந்தபடியினாலே அவளும் அவனுக்கு விடைகொடுத்தாள். மகா ஜனகன் வேறு வணிகருடன் கப்பல் ஏறிப் புறப்பட்டான். அதே நாளில் மிதிலை நாட்டு அரசனான பொல ஜனகனுக்கு உடம்பில் நோய் ஏற்பட்டது. எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் கிடந்தான்.

மகா ஜனகன் புறப்பட்டுச் சென்ற கப்பல் ஏழுநாட்கள் கடலிலே சென்றது. நடுக்கடலே சென்றபோது கப்பல், நீரின் அடியில் இருந்த பாறையிலே மோதிக் கொண்டது; கப்பலுக்குள் நீர் ஏறத்தொடங்கியது. பிறகு சிறிது சிறிதாகக் கடல் மூழ்கத் தொடங்கியது. மாலுமிகளும் வணிகர்களும் ஆபத்தை அறிந்து அழுது புலம்பித் தத்தம் தெய்வங் களை வேண்டிக் கொண் டார்கள். போதிசத்துவராகிய மகா ஜனகன் புலம்பி அழவில்லை. கப்பல் முழுகப்போவது உறுதி என்று எண்ணி யவராய் மனவுறுதியோடு முயற்சியுள்ளவரானார். அவர் உடம்பு முழுவதும்