பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 11

நீந்துகிற நீ கடமையைச் செய்வதில் பின்வாங்காத நீ, எண்ணிய காரியத்தில் வெற்றிபெறுவாய். உனக்கு ஒரு துன்பமும் நேரிடாது."

இவ்வாறு வாழ்த்திய மணிமேகலா தெய்வம், "நீபோக விரும்புகிற இடத்தைச்சொல்லு. உன்னை அங்கு கொண்டு போய் விடுகிறேன்” என்று கூறிற்று. "மிதிலாபுரிக்குப் போக விரும்புகிறேன்” என்று கூறினார் போதிசத்துவர்.

மணிமேகலா தெய்வம், தாய் குழந்தையைத் தூக்குவது போல அவரைத் தூக்கிற்று. களைப்பும் சோர்வும் அடைந்திருந்த போதி சத்துவர் கண்ணயர்ந்து தூங்கிவிட்டார். தெய்வம், அவரைத் தூக்கிக் கொண்டுவந்து மிதிலாபுரியின் ஒரு மாஞ்சோலையிலே ஒரு மரத்தின் கீழே வளர்த்திவிட்டுப் போய்விட்டது.

66

காலஞ்சென்ற மிதிலை மன்னன் பொல ஜனகனுக்கு ஆண் மக்கள் இலர். ஒரே ஒரு பெண்மகள் மட்டும் இருந்தாள். இந்தப் பெண் மகளுக்குச் சீவாலிதேவி என்று பெயர். இக் குமாரி அழகும் அறிவும் கல்வியும் உடையவள். அரசன் இறப்பதற்கு முன்பு அமைச்சர்கள், அரசர் பெருமானே! தங்களுக்குப் பிறகு யாருக்கு அரசாட்சியை அளிக்க வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அரசர் பெருமான், "சீவாலி குமாரிக்கு உகந்த அரசகுமாரனை அரசு கட்டிலில் ஏற்றுங்கள். அல்லது சதுரக்கட்டிலில் முகப்பைக் கண்டுபிடிக்கிறவனை, வளைக்க முடியாத வில்லை வளைக்கிறவனை, பூமிக்குள் இருக்கும் பதினாறு நிதிகளையும் எடுக்கிறவனை அரசனாக்குங்கள்" என்று கூறினார்.

அதற்கு அமைச்சர்கள், " பதினாறு நிதிகள் எவை” என்று கேட்டார்கள். அரசன் அந்த நிதிகளைக் கூறினார்: "தோன்று பகலவ னும், மறையும் பகலவனும், வெளியே உள்ளதும்,உள்ளே உள்ளதும், உள்ளும் வெளியும் இல்லாததும், ஏறும் இடத்ததும், இறங்கும் இடத்ததும், சாலை மரத்தூண்கள் நான்கும், யோசனை வட்டமும், பல்லின் நுனியும், வாலின் நுனியும்,கேபுகமும், மரங்களின் கோடியும் எனப் பதினாறு நிதிகளாம். இவை உள்ள இடத்தில் பதினாறு நிதிப் புதையல்கள் உள்ளன. ஆயிரம் பேர் வளைக்கக்கூடிய வில்லும். சதுரக் கட்டிலும் அரசகுமாரியை மகிழச் செய்வன என்று அரசன் கூறினான். பிறகு அரசன் இறந்துபோனான்.

وو

அரசர் இறந்தபிறகு அவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் காரியங்களைச் செய்தனர். பிறகு ஏழாம்நாள் அமைச்சர்கள் ஒன்றுகூடி