பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

66

57

وو

அரசகுரு போதிசத்துவரைப் பார்த்து, "பெருமானே! எழுந்து வாரும். அரசு தங்களுடையது” என்று தலைவணங்கி கைகட்டி வணக்க மாகக் கூறினார். “அரசர் எங்கே? அரசர் காலமாய்விட்டார். “அவருக்குப் பிள்ளைகளாவது, தம்பிகளாவது இல்லையா?” “ஒருவரும் இலர்.”“அப்படியானால் நான் அரசாட்சியை ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி அவர் அக்கருங்கல்லின்மேல் பதுமாசனமாக அமர்ந்தார். அப்போது அமைச்சர்களும் நகரத்துப் பிரபுக்களும் மற்றவர்களும் வந்து அவருக்கு அங்கேயே அபிஷேகம் செய்து, அவரை அரசனாக்கினார்கள். மகாஜனகன் என்று பெயரையும் வழங்கினார்கள்.

இவ்வாறு அரசனாகிய மகாஜனகன் தேரில் அமர்ந்து ஐம்பெருங் குழுவும் நால்வகைச் சேனைகளும் சூழ்ந்துவர வாத்திய கோஷங் களுடன் நகரிற் சென்று ஊர்வலமாகப்போய் அரண்மனைக்குச் சென்றார். சென்று சிம்மாசனத்தில் அமர்ந்து, தனக்குரிய அமைச்சர் களையும், சேனாதி பதியையும் அரச குருவையும் இன்னின்னார் என்று ஏற்படுத்தினார்.

இவை எல்லாம் ஆனபிறகு, சீவாலி அரசகுமாரி, புதிய அரச னுடைய அறிவைச் சோதிக்க எண்ணி, “சீவாலிகுமாரி தங்களை அழைக்கிறார். விரைவாக வரும்படிச் சொன்னார்” என்று அரச ரிடம் தெரிவிக்கும்படி ஒரு ஆளை அனுப்பினாள். ஏவலாளன் போய் அரசரிடம் செய்தி தெரிவித்தான். அரசர் அதைக்கேட்டுப் பொருட்படுத்தாமல், அரண்மனைக் காரியத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இந்த இடம் இப்படி அமைக்கப்பட வேண்டும், இது இப்படி இருக்க வேண்டும் என்று அவர் யோசனை சொல்லிக்கொண்டிருந்தார். பணியாள் திரும்பிவந்து, அரச குமாரியிடம் அரசர் பொருட்படுத்தாமல் இருப்பதைத் தெரிவித்தான். “இவர் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது” என்று அரச குமாரி தனக்குள் எண்ணிக்கொண்டு, மீண்டும் இரண்டுமுறை வெவ்வேறு ஆட்களைத் தனித்தனியே அனுப்பி அரசரை அழைத்தார். மன்னன் மெல்ல எழுந்து பெருமிதத்துடன் நடந்து படிகளைச் சாவதானமாக ஏறிச்சென்று அரசகுமாரி இருந்த இடத்திற்கு வந்தார். அவருடைய கம்பீரமான தோற்றத்தையும் பெருமிதத்தையும் கண்ட அரசகுமாரி எழுந்து போய் கைலாகு கொடுத்து வரவேற்றார். அரசர், சீவாலி குமாரி யின் கையைப் பிடித்து அவளுடன் வெண்கொற்றக் குடையின் கீழ்ச் சிம்மாசனத்தில் அமர்ந்து அமைச்சர்களை அழைத்து, அரசர் இறக்கும் சமயத்தில் என்ன சொன்னார்?" என்று கேட்டார். 'சீவாலி குமாரியை மகிழ்விப்பவர் யாரோ அவருக்கு அரசாட்சியைக் கொடுக்கச் சொன்னார்” என்று அமைச்சர்கள் தெரிவித்தார்கள்.

66

66