பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

சாலை மரத்தூண்களில் உள்ள நிதி என்பது, அரசனுடைய சிம்மாசனத்துக்கு நான்கு பருத்த சாலை மரத்தினால் செய்த கால் கள் என்று யூகித்து அறிந்து சிம்மாசனத்தின் நான்கு காலண்டைத் தரையைத் தோண்டி அங்கிருந்த செல்வப் புதையல்களை எடுத்தார். யோசனை வட்டத்தில் இருக்கும் நிதி என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்து, தேரின் நுகத்தடிக்கு யோசனை என்னும் பெயர் உண்டு என்று அறிந்து சிம்மாசனத்துக்கு ஒரு நுகத்தடி தூரம் என்று உணர்ந்து அங்குத் தோண்டி அங்கிருந்த புதையலை எடுத்தார். பல்லின் நுனியில் உள்ள நிதியை, அரசனுடைய கொற்றத்து யானை நிற்கும் யானைப் பந்தியிலே யானையின் பற்களாகிய தந்தத்திற்கு நேரே தரையில் உள்ள நிதி என்று யூகித்து, அவ்விடத்தைத் தோண்டி அங்கிருந்த செல்வப் புதையலை எடுத்தார். அவ்வாறே, வாலின் நுனியில் உள்ள செல்வம் என்பதை, அரசனுடைய குதிரை நிற்கும் குதிரைப் பந்தியிலே, குதிரை யின் வால்புறத்தின் கீழே உள்ள செல்வம் என்று பொருள் அறிந்து அவ்விடத்தைத் தோண்டி அங்கிருந்த செல்வத்தை எடுத்தார். கேபுக நிதி என்பதை, கேபுகம் என்றால் தண்ணீர். எனவே நீர்நிலையில் உள்ள நிதி என்று கண்டு, அரசாங்கத்து ஏரியின் நீரை இறைத்து, அவ்வேரி யின் கீழ் புதைக்கப்பட்டிருந்த நிதியை எடுத்தார். மரங்களின் கோடியில் உள்ள நிதி என்பது, அரண் மனையின் நந்தவனத்தில் இருக்கும் சாலை மரத் தோப்பிலே உச்சி வேளையில் மரநிழல் விழுகிற இடத்தில் இருக்கும் செல்வப் புதையல் என்று அறிந்து அங்குத் தோண்டி அப் புதையலை எடுத்தார். இவ்வாறு பதினாறு இடங்களில் இருந்த நிதிகளை எல்லாம் வெளியில் எடுத்தபிறகு, இன்னும் ஏதேனும் உண்டா? “என்று அரசர் வினவினார். அமைச்சர்கள், “இல்லை” என்று கூறினார்கள்.

66

மகா ஜனக அரசன், தமது நுண் அறிவினாலே செல்வப் புதையல் களைப் பூமியில் இருந்து எடுத்ததையறிந்து எல்லோரும் மகிழ்ந்தார் கள். பிறகு, அரசன், “இந்தச் செல்வங்களை எல்லாம் அறக்கடவுளின் வாயிலே போடப்போகிறேன்” என்று சொல்லி, ஐந்து அறச்சாலைகளை நகரத்திலே அமைத்தார். நகரத்தின் நான்கு வாயிலண்டையும் நகரத்தின் நடுவிலும் ஆக ஐந்து அறச் சாலைகளை அமைத்து, அச்சாலைகளில் ஏழை எளியவர்களுக்குத் தான தருமங்களை நாள்தோறும் செய்துவந்தார்.