பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

இல்லத்திற்குத் திரும்பி வந்தார். சில காலத்துக்குப் பின்னர், அவருடைய தாயும் தந்தையும் காலமானார்கள். பெற்றோருக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடமை களையெல்லாம் செய்தபிறகு, தமது குடும்பத்தின் செல்வத்தைப் பற்றி ஆராய்ந்தார். இன்னார் இன்னார் இவ்வளவு செல்வத்தைத் திரட்டி வைத்து இறந்தார்கள். அவர்களுக்கு பிறகு இன்னார் இன்னார் இவ்வளவு செல்வத்தைத் தேடி வைத்துப் போனார்கள் என்று கணக்குப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.

காணப்பட

இதைப் படித்தபோது அவர் மனத்தில் குழப்பம் உண்டா யிற்று. அவர் தமக்குள் இவ்வாறு எண்ணினார்: 'செல்வம் நாம் காணும்படி இங்கே இருக்கிறது. ஆனால், இதைச்சேர்த்து வைத்தவர்கள் வில்லை. அவர்கள் எல்லோரும் செல்வத்தை விட்டுவிட்டுப் போய் விட்டார்கள். ஆனால், நான் இறந்து போகும் போது என்னுடன் இவற்றை எடுத்துக்கொண்டு போவேன்.' இவ்வாறு எண்ணிய அவர் தமது தங்கையை அழைத்து, “இந்தச் செல்வத்தை எல்லாம் நீ பொறுப்பேற்றுக் கொள்க” என்று கூறினார். “அண்ணா! உங்கள் கருத்து என்ன? என்று கேட்டாள். "துறவுகொள்ளப் போகிறேன்" என்றார் தமையன். "ஐயோ! நீங்கள் துப்பிவிட்டதை நான் என்தலைமேல் வைத்துக் கொள்ளமாட்டேன். இவையெல்லாம் எனக்கும் தேவை யில்லை. நானும் துறவு கொள்ளுவேன்” என்றாள்தங்கை.

6

வாயால்

ஆகவே அரசனுக்குத் தெரிவித்து அவருடைய அனுமதி பெற்று, நகரமெங்கும் முரசு அறைவித்தார். “காசு வேண்டியவர்கள் அகித்திப் பிரபுவின் வீட்டுக்குப் போய்ப் பெற்றுக் கொள்ளலாம்" என்று நகரம் எங்கும் முரசறைவிக்கப்பட்டது. ஏழு நாட்களாக அவர் தமது செல்வத்தை வந்தவர்களுக்கெல்லாம் வாரிவாரி இறைத்தார். அப் பொழுதும் செல்வம் குறையவில்லை. பிறகு அவர் தனது மாளிகையின் கதவுகளை எல்லாம் திறந்துவிட்டு, "வேண்டியவர்கள் வந்து பொருளைக் கொண்டுபோங்கள்” என்று கூறினார். இவ்வாறு தமது செல்வத்தை யெல்லாம் கொடுத்துவிட்டு, சுற்றத்தார்கள் எல்லோரும் சூழ்ந்து புலம்ப, இவரும் இவர் தங்தையும் துறவுபூண்டு வெளியேறினார்கள். இவர்கள் கடந்துசென்ற நகரத்தின் வாயில் அகித்தி வாயில் என்றும், இவர்கள் ஆற்றைக் கடந்துசென்ற துறை அகித்தித் துறை என்றும் பெயர்பெற்றன.