பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

75

இவ்வாறு நிறைமனம் அடைந்து மகிழ்ச்சிகொண்ட போதிசத்துவர் மூன்று நாட்கள் உணவு கொள்ளாததால் தளர்ச்சியோடு உட்கார்ந்தார். அப்போது சக்கன் தனக்குள் எண்ணினான்: ‘இந்தப் பிராமணன் மூன்று நாளாகப் பட்டினி கிடந்தும், பசியுடன் களைப்படைந்திருந்தும், தன் உணவைத் தானம் செய்து மகிழ்ச்சியுடனும், நிறைமனத்துடனும் இருக்கிறான். இவனுடைய கருத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அவனைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்' என்று எண்ணி, மாலை நேரம் ஆனவுடன், சக்கன் இளமையும் ஒளியும் பொருந்திய தெய்வ உருவத்துடன் போதிசத்துவரின் முன்பு தோன்றினான். தோன்றி, “ஓ முனிவரே! உப்புநீர் சூழ்ந்த சூடான காற்று வீசுகிற இந்தக் காட்டிலே இருந்து நீர் எதற்காகத் தவம் செய்கிறீர்?" என்று கேட்டான்.

இதைக்கேட்ட போதிசத்துவர், இவர் சக்கன் என்பதை அறிந்து இவ்வாறு விடை கூறினார்: "பிறப்பு, மூப்பு, சாவு இவை எல்லாம் துன்பம் தருவன. ஆகையால், சக்கவாசவ! அமைதியோடு இங்கு இருக்கிறேன்." இவ்வாறு சொல்லக் கேட்ட சக்கன் உளம் மகிழ்ந்து தனக்குள் எண்ணினான்: 'இவன் எந்தப் பிறப்பையும் விரும்பாதவர். நிர்வாண மோக்ஷத்துக்காக இவர் காட்டில் வாழ்கிறார். இவருக்கு ஏதேனும் வரம் தரவேண்டும்' என்று நினைத்து, "முனிவரே! நன்கு சொன்னீர். உமக்கு வேண்டிய ஏதேனும் வரம் ஒன்றைக் கேளும்; நான் தருகிறேன்” என்று கூறினார்.

“மனைவி, மக்கள், செல்வம், பொன், பொருள் இவை எல்லாம் மன அமைதியைத் தருவதில்லை. தேவர் தலைவ! இவைகள் ஒன்றையும் என் மனம் விரும்பவில்லை.'

“நன்று நன்று. முனிவரே! இவை தவிர உமக்கு வேண்டிய வேறு வரத்தைக் கேளும், தருகிறேன்” என்றான் சக்கன்.

"நில புலன்களும், பொன்னும் பொருளும், ஆட்களும், அடி மைகளும், ஆடுமாடுகளும் இவை எல்லாம் நிலையற்றவை. இவை களை எல்லாம் என் மனம் விரும்பாமல் இருப்பதாக" என்று கூறினார் அகத்திமுனிவர்.

66

வையெல்லாம் தேவையில்லாவிட்டால் வேறு எதையேனும் கேளும்; தருகிறேன்” என்று சொன்னான் சக்கன்.