பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

79

செம்பாதியாகப் பகிர்ந்து தன் நண்பனுக்குக் கொடுத்தார். இந்தச் செல்வங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு பிலியன் தனது ஊராகிய வாரணாசிக்குச் சென்று முன்போலவே சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

சிலகாலஞ் சென்றது. போதிசத்துவராகிய கோடீசுவரருக்குக் கெட்டகாலம் ஏற்பட்டு அவருடைய செல்வம் எல்லாம் போய் விட்டன. நிலபுலங்களும், ஆடுமாடுகளும் போய்விட்டன. ஏழ்மை நிலை யடைந்து வறுமையினால் துன்புற்றார். வறுமைக்காலத்தில் அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. கடைசியில், முன்பு தான் பிலியனுக்கு உதவிசெய்ததை நினைத்து அந்தக் கோடீசுவரனிடத்திற்குப் போக எண்ணினார். தமது மனைவியை அழைத்துக்கொண்டு, கால்நடை யாகவே வாரணாசிக்குப் போனார். நகரத்தின் எல்லையை அடைந்ததும், தமது மனைவியை ஒரு நிழலான இடத்தில் விட்டு, “நீ நகரத்துக்கு வரவேண்டாம். நான்போய், நண்பனுடைய வண்டியைக் காண்டுவந்து உன்னை அழைத்துக் கொண்டுபோகிறேன்” என்று சொல்லி, தான் மட்டும் நகரத்துக்குள் சென்றார். சென்று பிலியனுடைய மாளிகையை அடைந்து, இராஜகிருக நகரத்திருந்து கோடீசுவரன் வந்திருப்பதாகச் சொல்லும்படி, வாயிலில் இருந்த ஆளினிடம் சொல்லியனுப்பினார். “அவரை உள்ளே அழைத்துவா” என்றான் பிலியன். போதி சத்துவர் உள்ளே போனார். இவருடைய ஏழ்மை நிலையைக் கண்டதும், பிலியன் இவரை மதிக்காமலும், எழுந்துவந்து வரவேற்காமலும், நல்வரவு கூறாமலும், "இங்கு ஏன் வந்தீர்?” என்று கேட்டான். “தங்களைக் காணவந்தேன்" என்று விடையளித்தார் போதிசத்துவர். “எங்கே தங்கியிருக்கிறீர்?” “இதுவரையில் எந்த இடமும் இல்லை. மனைவியை ஒரு சத்திரத்தில் விட்டுவிட்டு உம்மிடம் வந்தேன்.” “இங்கு இடம் இல்லை. அரைப்படி அரிசி தருகிறேன். கொண்டுபோய்ச் சமைத்துச் சாப்பிட்ட பிறகு திரும்பிப் போய்விடுங்கள். மறுபடியும் இங்கு வரவேண்டாம்" என்று சொல்லி, தன் பணியாளனிடம் அரைப்படி அரிசி அளந்து கொண்டுவந்து கொடுக்கும்படி கூறினான். அன்றுதான் ஆயிரம் வண்டி அரிசி ஆ மூட்டைகள் அவனுடைய களஞ்சியத்தில் வந்து இறங்கின. முன்பு நாற்பதுகோடி பொன்னையும், நில புலன்களையும், ஆடுமாடுகளையும், அடிமைகளையும் தாராள மாக வழங்கிய போதிசத்துவருக்கு, இன்று வன் அரைப்படி அரிசியைப் பிச்சைக்காரனுக்குப் பிச்சை கொடுப்பதுபோலக் கொடுக்கிறான்!

·