பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

பணியாளன் அரிசியைக் கொண்டுவந்து கொடுத்தான். அதை வாங்கிக்கொள்வதா, வேண்டாமா என்று போதிசத்துவர் தமக்குள் எண்ணினார். இந்த நன்றிகெட்டவன் என்னுடைய வறுமை காரணமாக நட்பையும் மறந்துவிட்டான். இந்த அரிசியை வேண்டாம் என்று மறுத்தால், நானும் இவனைப் போல் நட்பை மறந்தவனாவேன் என்று எண்ணியவராய், தமது துணியின் ஒரு மூலையில் அரிசியை முடிந்துகொண்டு, அதை மனைவியிடம் கொண்டுவந்தார்.

66

“என்ன கொடுத்தார்?” என்று கேட்டார் மனைவியார். “அரைப் படி அரிசியைக் கொடுத்து என்னைக் கைகழுவிவிட்டான்” என்று கூறினார் போதிசத்துவர். "ஏன் அதை வாங்கி வந்தீர்கள், நாற்பது கோடி பொன்னுக்கு ஈடா இது?” என்று சினங்கொண்டு உரத்துப் பேசினாள். "நண்பனின் கஞ்சத்தனம் மனத்தைத் துன்புறுத்துகிறது. ஆனால் நட்பு போகக்கூடாது என்பதற்காக வாங்கிக்கொண்டேன். நீ சினம் கொள்ள வேண்டாம்” என்று கூறினார். அந்த அம்மாள், இறைந்து பேசிப் பிலிய னுடைய கருமித்தனத்தை இகழ்ந்து பேசினாள்.

அவ்வமயம் வயல் வேலை செய்யும் ஆள் ஒருவன் அவ் வழியாகப் போனான். இந்த அம்மாள் இறைந்து பேசுவதைக் கேட்டு அந்த ஆள் அருகில் வந்தான். அவன், முன்பு போதிசத்துவரிடம் அடிமை ஆளாக வயலில் வேலை செய்தவன். பிலியனுக்குப் போதிசத்துவர் கொடுத்த அடிமை ஆட்களில் ஒருவனாக வாரணாசிக்கு வந்தவன். தனது பழைய எஜமானியம்மாளின் குரலைக்கேட்டு அங்கு வந்து இவர்களைக் கண்டான். கண்டு இவர்கள் காலில் விழுந்து வணங்கி, இவர்களின் இப் போதைய நிலைமையைக்கண்டு மனம் வருந்தி அழுதான். போதி சத்துவர், தாம் செல்வத்தை இழந்து வறுமையை யடைந் ததையும், வாரணாசிக்கு வந்து பிலியனைக் கண்டதையும், அவன் அரைப்படி அரிசி கொடுத்து அனுப்பிவிட்டதையும் அந்த ஆளிடம் கூறினார். அவன் இவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய், இவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்தான்.

பிறகு, அந்த ஆள் மற்ற ஆட்களுக்குப் பழைய எஜமானர் வந்திருப்பதையும், அவர் வறுமையடைந்து வாரணாசிக்கு வந்ததையும், பிலியன் பிரபு அவரை நடத்திய விதத்தையும் தெரிவித்தான். அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒருநாள் அரசர் பெருமானுடைய அரண் மனைக்குப் போய், 'குய்யோ முறையோ' என்று கூச்சல் இட்டார்கள். அரசர் பெருமான் அவர் களை அழைத்து,