பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

“நான் சக்கன், தேவர்களின் அரசன் என்னும் பெருமை இருந்தாலும், பிறருக்குக் கண்ணைக் கொடுக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. நீர் செய்த தான தருமங்களின் பலன்தான் உமக்குக் கண்ணைக் கொடுக்கமுடியும் என்றார் சக்கன்.

6

அப்போது சிவி அரசர் தமது கொடையைப் பற்றி இக் கட்டுரையைக் கூறினார்: "இன்னார் இனியர் என்று கருதாமல், யார் எது கேட்டாலும், மனம் உவந்து பிரிதிபலன் கருதாமல், அவர்களுக்குத் தானம் செய்தது உண்மையாக இருக்குமானால், எனக்குப் பார்வை உண்டாகட்டும்.” இதைச் சொல்லி முடித்த உடனே, அரசனுக்கு ஒரு கண் பார்வை உண்டாயிற்று. பிறகு அவர் மற்றக்கண் பார்வை பெற மற்றொரு கட்டுரை கூறினார்: “பிராமணக் குருடன் வந்து ஒரு கண்ணைக் கேட்டபோது நான் இரண்டு கண்களையும் தானம் செய்தேன். அவ்வாறு கண்களைத் தானம் செய்தபோது, மகிழ்ச்சியோடு மனம் உவந்து கொடுத்தது உண்மையானால், எனக்கு மற்றக் கண் பார்வையும் உண்டாகட்டும்.” இதைக் கூறியபோது மற்றக் கண்ணும் பார்வை பெற்றது.

ஆனால், இந்தக் கண்கள் இயற்கைக் கண்களும் அல்ல, தெய்வீகக் கண்களும் அல்ல. பிராமணன் பார்வை பெற்றது இயற்கைக் கண்களால் அல்லவே. தெய்வீகக் கண்களும், புண் பட்ட இடத்தில் உண்டாகாது. எனவே சிவி அரசர் பெற்ற கண் பார்வை, உண்மை என்னும் பார்வையும் நிறையறிவு என்னும் பார்வையும் ஆகும். இ பார்வைகள் அரசருக்குத் தோன்றியபோது, சக்கனுடைய விருப்பத் தினாலே, அமைச்சரும் பரிவாரங்களும் அரசரைக்காண அங்கு வந்தார்கள். அப்போது, யாவரும் கேட்கும்படி சக்கன் கூறினான்: “அரச! நீர் கூறிய மெய்ப்பொருள் கட்டுரையினாலே நீர் தெய்வீகப் பார்வை பெற்றீர். சுவர்களுக்கும் பாறைகளுக்கும் அப்பால் உள்ளதையும், மலை களுக்கும் காடுகளுக்கும் அப்பால் உள்ளதையும், நூறு காதத்திற்கு அப்பால் உள்ளதையும் உம்முடைய தெய்வீகப் பார்வை யால் காண முடியும்." இவ்வாறு சொல்ய சக்கன் ஆகாயத்தில் மறைந்து போனான்.

பிறகு, அரசர் பெருமான் பரிவாரங்களுடன் புறப்பட்டு நகரத்திற்குச் சென்று சந்தகம் என்னும் அரண்மனையை யடைந்தார். சிவி அரசன் பார்வைபெற்ற செய்தி நாடெங்கும் பரவியது. நாட்டு மக்கள் எல்லோரும் கையுறையுடன் வந்து அரசரைக் கண்டு மகிழ்ந்தார்கள். நகரமக்கள்