பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

95

அழைத்து, மன்னர் ஊர்வலம் வீட்டுக்கருகில் வரும்போது தன்னிடம் வந்து சொல்லும்படி கட்டளையிட்டாள்.

மாலை நேரம் வந்தது. சூரியன் மறைந்தது. முழுநிலா வானத்தில் தோன்றி பால்போல் வெளிச்சத்தைத் தெளித்தது. அலங்கரிக்கப்பட்டிருந்த நகரம் முழுவதும், தீவட்டிகளும் விளக்குகளும் ஏற்றப்பட்டுத் தெய்வ லோகம் போலக் காணப் பட்டது. மன்னர் பெருமான் ஆடையணிகள் அணிந்து, அழகான குதிரைகள் பூட்டிய தேரிலே அமர்ந்து, பரிவாரங் கள் சூழ்ந்துவரப் புறப்பட்டு ஊர்வலம் வந்தார். ஊர்வலம் முதன்முதல் அஹிபாரகனின் மாளிகையண்டை வந்தது. மாளிகை, செந்நிறச் சுண்ணம் பூசிய சுற்று மதில்களையும் வாயில்களையும் சிகரங் களையும் உடையதாய் காட்சிக்கு இனியதாக இருந்தது. அரசர் ஊர்வலம் வருகிற செய்தியைப் பணிப்பெண் வந்து தெரிவித்தாள். உடனே, உம்மாதந்தி மாளிகையின் மேற்புறத்தில் உள்ள சாளரத்தண்டை கூடை நிறைய பூக்களைக் கொண்டுபோய் வைத்துக் கொண்டு, வனப்பு வாய்ந்த தெய்வ மகள்போல நின்றுகொண்டு, அரசன்மேல் பூக்களைச் சொரிந்தாள்.

மேருந்து பூக்கள் விழுவதைக்கண்ட அரசன் தலை நிமிர்ந்து பார்த்தான். உம்மாதந்தியின் கவர்ச்சிகரமான பேரழகைக்கண்டு மயங்கிக் காமவசப்பட்டான். தன் மனத்தை அடக்கமுடியாமல் தன்னையே மறந்தான். அது சேனாபதி அஹிபாரகன் மாளிகை என்பதும் நினைவில்லாமல் தேர் ஓட்டுகிறவனைக் கேட்டான்: "சுநந்த, இது யார் வீடு? இதில் இருக்கிற அழகி யார்? இவள் திருமணம் ஆனவளா? கன்னிப்பெண்ணா?’

தேரோட்டும் சுநந்தன் விடை கூறினான்: “மன்னவ, இந்த அம்மாள் பிறந்த இடமும், புகுந்த இடமும் உயர்ந்த குடும்பம். இவருடைய கணவன், தங்களிடம் அல்லும் பகலும் உண்மையாக உழைத்து ஊழியம் செய்துவருகிற சேனாதிபதி அஹிபாரகர். இந்த அம்மாள் உம்மாதந்தி என்னும் பெயருள்ள, அவருடைய மனைவியார்."

“உம்மாதந்தி என்பது சரியான பெயர்தான். உம்மாதந்தி என்னைப் பார்த்த பார்வை உள்ளத்தை மயக்கி உன்மத்தனாக்கிவிட்டது” என்று அரசன் கூறினான்.